புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சமந்தாவுக்கு முன்னாடியே சுருதிஹாசனை வளச்சு போட்ட நாகசைதன்யா.. வெளியான உண்மை

நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரின் விவாகரத்தை பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் சமந்தாவுக்கு முன்னரே நாக சைதன்யாவுக்குனுடன் ஒரு காதல் இருந்துள்ளது என்ற தகவல் வெளியாகி மேலும் அவர்களது விவாகரத்து விஷயத்தை சுவாரசியமாக உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் அடுத்த சில வருடங்களிலேயே பிரிந்து விடுவதை பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதுவும் சினிமா வட்டாரத்தில் சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் ஈகோ பிரச்சினை காரணமாகத்தான் காதலர்கள் பிரிந்து விடுகின்றனர்.

அப்படித்தான் சமீபத்தில் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு இருவரும் தங்களுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். சமந்தா தற்போது பாலிவுட் படங்களுக்கு வலைவிரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்னரே நடிகை சுருதிஹாசனை காதலித்து வந்ததாகவும் இருவரும் ஒரு கட்டம் வரை லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறுகின்றனர். அச்சமயத்தில் ஒரு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து விட்டதாக ஒரு தகவல் தெலுங்கு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது மட்டும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரியாமல் இருந்திருந்தால் நாகசைதன்யா சுருதிஹாசனை தான் திருமணம் செய்து கொண்டிருப்பார் என அடித்துச் சொல்கிறது தெலுங்கு வட்டாரம். ஸ்ருதிஹாசன் தற்போது ஒருவரை காதலித்து வருகிறார் என்பது தெரிந்தது.

அதற்கு முன்னர் ஒருவரை காதலித்து திருமணம் வரை சென்று நின்றுவிட்டது. இப்படி நடிகர், நடிகைகள் வாழ்க்கையில் ஒன்றுக்கு பல காதல்கள் இருந்து வருவதுதான் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

Trending News