புதன்கிழமை, ஜனவரி 15, 2025

என்னுடைய அடுத்த காதல்.. சமந்தாவுக்கு பதிலடி கொடுத்த நாக சைதன்யா

கடந்த சில வாரங்களாகவே பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி என்னவென்றால் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் விவாகரத்து செய்து கொண்டதுதான். அதன்பிறகு சமந்தா நிறைய பேசினாலும் நாக சைதன்யா இது வரை அமைதியாகவே இருந்து வந்தார்.

இதுவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகைகளில் இவர்களைப் போல் யாரும் அலப்பறை செய்யவில்லை எனும் அளவுக்கு தங்களுடைய காதல் கல்யாணத்தை பிரம்மாண்டமாக செய்தனர் நாக சைதன்யா மற்றும் சமந்தா. கொஞ்சநஞ்சம் செலவு இல்லை.

ஒரு குடும்பமே ஆயுசுக்கும் உட்கார்ந்து சாப்பிட ஆகும் செலவை அசால்டாக திருமண செலவு செய்தனர். அதுமட்டுமில்லாமல் ஹனிமூன் போனதும் அங்கேயே இரவு இருவரும் தனிமையில் இருந்ததைக் கூட சமந்தா தன்னுடைய ஸ்டோரில் இன்று எங்களுக்கு பஸ்ட் நைட் என பதிவிட்டு வேற லெவல் செலிபரேட் செய்தார்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து விட்டனர். பிரிந்த கையோடு சமந்தா ஏகப்பட்ட கருத்துக்களை சமூக வலை தளத்தில் வெளியிட்டு வந்தாலும் நாக சைதன்யா எதையும் வெளிப்படையாக கூறாமல் அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய அடுத்த காதல் என ஒரு புத்தகத்தின் புகைப்படத்தை போட்டு பதிவிட்டுள்ளார். இவ்வளவு நாட்களாக சமந்தா ஏதோ நாக சைதன்யா மீதுதான் குற்றம் இருப்பது போல் பதிவுகளை வெளியிட்டு வந்தார். ஆனால் தற்போது சமந்தா பக்கம் தான் தப்பு இருப்பது போல் தெரிகிறது என அவர் மீது பாய ஆரம்பித்துவிட்டது பத்திரிக்கை வட்டாராம்.

Trending News