புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அவசரப்பட்டு டைவர்ஸ் அறிவித்த நாக சைதன்யா.. அதிர்ச்சியான சமந்தா வேறு வழியில்லாமல் செய்த பதிவு

இந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி என்றால், அது சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து செய்திதான். தீவிரமாக காதலித்து வந்த இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

இருவரது திருமண வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாக சென்று கெண்டிருந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சமந்தா திருமணத்திற்கு பிறகு படங்களில் அதிக அளவு கவர்ச்சி காட்டியதே இவர்கள் பிரிய முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இதுதவிர எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல பேமிலி மேன் வெப் தொடரில் பெட்ரூம் காட்சியில் சமந்தா மிகவும் நெருக்கமாக நடித்தது இவர்கள் வீட்டில் பிரச்சனை வெடிக்க காரணமானது. பல நாட்களாக நிலவி வந்த வதந்திக்கு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து முற்றுப்புள்ளி வைத்தனர்.

அதாவது இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக அவரவர் சமூக வலைதள பக்கத்தில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அறிவித்திருந்தனர். ஆனால் முதலில் நாக சைதன்யா தான் அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதன் பின்னரே சமந்தா அறிவித்தார்.

அதாவது சமந்தா நாக சைதன்யாவிடன் இரண்டு நாட்கள் கழித்து விவாகரத்து செய்தியை மீடியாவில் அறிவிக்கலாம் என கூறியுள்ளார். ஆனால் நாக சைதன்யா சமந்தா மீது இருந்த கோபத்தால் முன்னரே அறிவித்து விட்டாராம்.

naga-chaitanya-twit
naga-chaitanya-twit

இவர்கள் விவாகரத்தை அறிவித்த தினத்தில் இருந்து சில தினங்களில் அவர்களின் திருமண நாள் வர உள்ளது. அதனால் தான் சமந்தா அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் நாக சைதன்யா அவசரப்பட்டு அறிவித்து விட்டதாக செய்தி வெளியாகி வருகிறது.

Trending News