வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நாகசைதன்யா – சமந்தா விவாகரத்தா.? பல கோடியில் ஜீவனாம்சம்.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா சென்னையை சேர்ந்த பெண். மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா தனது நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் தான் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த இளம் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சென்னை பெண்ணான சமந்தா அக்கட தேசத்திற்கு மருமகளாக சென்று நல்ல பெயர் வாங்குவார் என எதிர்பார்த்த நிலையில், இருந்த பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார்.

நாகசைதன்யாவின் தந்தை நாகர்ஜூனாவும் தெலுங்கில் முன்னணி நடிகராவார். அதுமட்டுமின்றி இவர்களின் குடும்பத்திற்கென தனி மரியாதை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த சமந்தா எல்லை மீறிய கவர்ச்சி காட்டியதால், இவர்களது குடும்பத்தில் முதல் முறையாக பிரச்சனை வெடித்துள்ளது.

samantha-naga-chaitanya-cinemapettai
samantha-naga-chaitanya-cinemapettai

மேலும் சமந்தா கவர்ச்சியாக நடிப்பது, போட்டோஷூட்டுகளில் கலந்து கொள்வது போன்ற செயல்கள் அவரின் கணவர் குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இது தொடர்பாக சமந்தாவிடம் பல முறை பேசியும் அவர் மாறுவதாக தெரியவில்லையாம். ஏற்கனவே பிரச்சனை ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா தாறுமாறான கவர்ச்சி காட்டவே குடும்பத்தில் பூகம்பம் வெடித்துள்ளது.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சரி என் கெரியர் விஷயத்தில் நான் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என சமந்தா பிடிவாதமாக இருந்ததே தற்போது விவாகரத்து வரை வந்ததற்கான காரணம் என கூறுகிறார்கள். மேலும் விவாகரத்து நடப்பது உறுதி என நெருங்கிய நட்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகிறார்கள். எப்படியும் இன்னும் 2 முதல் 3 மாதங்களில் தீர்மானமாகிவிடுமாம். விவாகரத்து மூலம் சமந்தாவுக்கு ரூ.50 கோடி ஜீவனாம்சம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Trending News