ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நயன்தாரா சர்ச்சையில் சம்பந்தமில்லாமல் சிக்கிய நாக சைதன்யா.. இது என்ன வம்பா போச்சு!

Nayanthara: முன்னந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறதுன்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு விஷயம் தான் நாக சைதன்யா விஷயத்தில் நடந்திருக்கிறது. சமீபத்தில் நயன்தாரா தன்னுடைய டாக்குமென்ட்ரி வீடியோவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார்.

நான் ஹீரோயினாக நடித்து என் கணவர் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை தயாரிப்பாளர் தனுஷ் பயன்படுத்த கூடாது என்கிறார் என பிராது ஒன்றையும் கொடுத்திருந்தார். போன வாரம் முழுக்க சமூக வலைத்தளத்தில் இந்த பஞ்சாயத்து பெரிய அளவில் போனது.

சும்மா இருந்த சிம்புவெல்லாம் ட்ரோல் பண்ணி வச்சிருந்தாங்க. சரி நயன்தாராவுக்கு சம்பந்தப்பட்டவர்களை இதில் இழித்து விட்டார் பரவாயில்லை. சம்பந்தமே இல்லாத நாக சைதன்யாவும் இந்த கதைக்குள் வந்தது தான் சுவாரஸ்யம்.

இது என்ன வம்பா போச்சு!

கல்யாண கேசட் என்ற வார்த்தையை உருவாக்கிய பெரியளவில் வைரல் ஆக்கினார்கள். அடுத்து யாரு கல்யாண கேசட்டை விற்க எலிஜிபிள் ஆன ஆள் என்று யோசித்து விரைவில் திருமணம் செய்ய இருக்கும் நாக சைதன்யாவை உள்ளே இழுத்துப் போட்டு விட்டார்கள்.

நாக சைதன்யா திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு 50 கோடிக்கு விற்பனை செய்ய இருப்பதாக தகவலும் வெளியானது. ஆனால் இந்த தகவலை இன்று பிங்க் வில்லா பத்திரிக்கை மறுத்து இருக்கிறது. நாக சைதன்யா மற்றும் சோபித்த இருவருக்கும் இடையே உள்ள நெருக்கமான வட்டாரங்களை விசாரித்ததில் இது உண்மை இல்லை என தெரிய வந்திருக்கிறதாம்.

இவர்களுடைய திருமணம் நெருங்கிய உறவினர்களோடு நடைபெற இருக்கிறதாம். அக்கினேனி பாரம்பரிய வழிமுறைகளை பின்பற்றி நடக்க இருக்கும் இந்த திருமணத்தை மீடியாக்களில் கொண்டு வர அவர்களுக்கு விருப்பம் இல்லையாம்.

Trending News