ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

திருட்டுத்தனம் இனி இல்ல.. இப்போத்தானே தெரிகிறது உங்கள் லட்சணம்

நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா சில ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், சில பல காரணங்கள் காரணமாக சமந்தாவை பிரிந்து விவாகரத்து பெற்று விட்டார். பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நாக சைதன்யா ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார்.

ஒருபக்கம் சமந்தா வெளியில் என்னதான் ஸ்ட்ரோங் ஆக காட்டிக்கொண்டாலும், தனிமையில் வாடுகிறார். சமீபத்திய நேர்காணலில் கூட தனக்கென்று யாரும் இல்லை.. தன்னை மருத்துவமனைக்கு கூட ஒருவரும் அழைத்து சென்றதில்லை என்று சொன்னார். ஆனால் இந்த பக்கம், photo-க்களை பதிவிட்டு, சமந்தா ரசிகர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர்.

இனி திருட்டுத்தனம் தேவை இல்ல

பொதுவாகவே காதல் முறிவுகளில், ஒருவர் மீண்டுவிடுவார்கள். மற்றொருவர், உடைந்தே போய்விடுவார்கள். இது இயற்க்கை தான். ஆனால், என்ன தான் இது பொத்தாம்பொதுவாக நடக்கும் விஷயமாக இருந்தாலும், அவரவர்களுக்கு ஏற்படும் வலி அதிகம். உடல் வலியை விட மன வலி கொடியது. அது ஒருவரின் தன்னம்பிக்கையே உடைத்துவிடும், அடுத்தவர்கள் மீது கொள்ளும், நம்பிக்கையை தவிடு பொடியாக்கி விடும்.

ஆனால் இத்தகைய வலியில் இருந்து சமந்தா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இப்படியிருக்க, சோபித துளிப்பலாவை திருமணம் செய்யவிருக்கிறார் நாக சைதன்யா. இதற்க்கு சமந்தா எந்த ரியாக்ஷனும் இதுவரை கொடுக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது, புது காதலர்கள், போட்டோ போட்டு வருகிறார்கள். அதில் சமீபத்திய போட்டோவில். இனி திருட்டு தனம் தேவை இல்லை என்ற caption வேறு.. இதை பார்த்து சமந்தா ரசிகர்கள், பயங்கரமாக விமர்சித்து வருகின்றனர்.

Trending News