திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சமந்தாவை பற்றி வெளிப்படையாக பேசிய நாக சைதன்யா.. என்ன ஒரு பரந்த மனசு

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் சமந்தா, நாக சைதன்யா. சென்னையை பூர்வீகமாக கொண்ட சமந்தா தெலுங்கு சினிமாவின் பிரபல அக்கினேனி குடும்பத்து வாரிசு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நன்றாக சென்று கொண்டு இருந்த அவர்களுடைய திருமண வாழ்வு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து மனமொத்து பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தனர்.

அவர்களின் இந்த அறிவிப்பு சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர்களின் பிரிவு குறித்து ஊடகங்களில் பலவிதமான செய்திகள் வெளியாகியது.

இருப்பினும் சம்பந்தப்பட்ட அவர்கள் இருவரும் தங்களின் பிரிவுக்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா ஒரு பேட்டியில் இந்த விவாகரத்து பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நாங்கள் பிரிவது என்று முடிவு செய்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் அது. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்.

ஒரு இக்கட்டான சூழலில் விவாகரத்து தான் சரியான முடிவு. அதனால்தான் நாங்கள் பிரிவதற்கு முடிவு செய்தோம் என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா திருமணத்திற்குப் பின்னும் அதிகப்படியான கவர்ச்சி காட்டி நடித்து தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என ஊடகங்களில் சொல்லப்பட்டது.

திருமண வாழ்வில் இருந்து பிரிந்தாலும் நாங்கள் நண்பர்களாக தொடர்வோம் என்று சமந்தா ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது நாக சைதன்யா, சமந்தா மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பது அவர்களுக்குள் இருக்கும் அந்தக் காதல் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

Trending News