செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

என்னோட ரசிகன் இதை ஏத்துக்க மாட்டான்.. விஜய் மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாது எனக் கூறிய நாகார்ஜுனா

Thalapathy Vijay: சினிமாவை பொறுத்த வரைக்கும் எந்த சீன் ரசிகர்களுக்கு பிடிக்கும், எப்படிப்பட்ட கிளைமாக்ஸ் வெற்றி பெறும் என்பதெல்லாம் யாராலுமே கணிக்க முடியாது. அப்படித்தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ஒன்றின் கிளைமாக்ஸ் சீனை தவறாக எடை போட்டு, பின்னர் பயங்கரமாக பல்பு வாங்கி இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் நாகார்ஜுனா. தன்னுடைய மகன்கள் இருவரும் நடிக்க வந்த பிறகும் கூட இன்று வரை அதே இளமையுடன், கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்கும் பொழுது, இந்த கிளைமாக்ஸ் சீனை மாற்றிய ஆக வேண்டும், இது போன்ற காட்சிகளில் நான் நடிக்கவே மாட்டேன் என அடம்பிடித்து இருக்கிறார்.

Also Read:இந்தியாவை புரட்டி போட்டவருடன் கூட்டணி போடும் ஜோசப் விஜய்.. அரசியல் என்ட்ரினா இப்படி இருக்கணும்

தளபதி விஜய்க்கு ஆரம்ப காலத்தில் வெற்றி மேல் வெற்றி கொடுத்த படங்கள் எல்லாமே காதல் திரைப்படங்கள் தான். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களின் வரிசையில் அவருக்கு ஹிட் கொடுத்த படம் தான் துள்ளாத மனமும் துள்ளும். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியாகி இன்று வரை 90 கிட்ஸ் களில் பேவரைட் திரைப்படமாக இருப்பது இதுதான்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சீனில் குட்டி யார் என்று தெரிந்து கொள்ளும் ருக்கு, ஒரு கலெக்டராக இருந்தாலும் குட்டியை தேடி ரோட்டில் ஓடி வருவது போல் காட்டப்பட்டு இருக்கும். ஒரு கலெக்டராக இருக்கும் கதாநாயகி இது போன்று ரோட்டில் ஓடி வருவது போன்ற காட்சி எடுத்தால் கண்டிப்பாக தெலுங்கு மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே இந்த கிளைமாக்ஸ் சீனை மாற்றியே ஆக வேண்டும் என்று நாகார்ஜுனா சொல்லி இருக்கிறார்.

Also Read:அரசியலுக்காக பல வருடமாக போடப்பட்ட திட்டம்.. கைவசம் இத்தனை தொழில்களை வைத்திருக்கும் தளபதி

தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி இந்த விஷயத்தை கேள்விப்பட்டு நாகார்ஜுனாவை நேரில் சந்தித்து இந்த கிளைமாக்ஸ் சீன் தான் இந்த படத்திற்கு நன்றாக இருக்கும். நம்பி இந்த காட்சியில் நடித்துப் பாருங்கள். ஒரு வேளை இங்கு இந்த சீன் எடுபடாமல், படம் தோல்வியுற்றது என்றால் பேசிய சம்பளத்தை விட பத்து மடங்கு நான் உங்களுக்கு அதிகமாக தருகிறேன் என்று சமாதானப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்.

நாகார்ஜுனாவும் என்ன செய்வது என்று தெரியாமல் அரைகுறை மனதோடு படத்தை நடித்து முடித்து இருக்கிறார். படம் ரிலீசுக்கு பிறகு இந்த கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, படமும் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அப்போதுதான் நாகார்ஜுனாவுக்கு அவர் நினைத்தது போல் ரசிகர்கள் கிடையாது, வெற்றிக்கு கதை தான் முக்கியம் என்பது தெரிந்திருக்கிறது.

Also Read:விஜய்க்கு பிடித்திருக்கும் பெரிய ஈகோ.. கொஞ்சம் கூட யோசிக்காமல் தளபதி செய்யும் வேலை

Trending News