வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அப்பா வயது நடிகருடன் ஜோடி போடும் இலியானா.. காஜல் அகர்வால் நடிக்க முடியாததால் கிடைத்த வாய்ப்பு.!

கேடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இலியானா. விஜய்யுடன் நண்பன் படம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்.

தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் பிரபலமாக நடிக்க தொடங்கினார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜுனா. இவர் தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

பிரவீன் சட்டரு இயக்கும் படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் தற்போது ஹீரோயினை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை இலியானாவை நடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகை சமந்தாவின் கணவர் நடிகர் நாகசைதன்யா தந்தை நடிகர் நாகர்ஜுனா.

ileana-new
ileana-new

முதல்முறையாக முறையாக நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக இலியானா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 28 வயது வித்தியாசம் உள்ள நடிகருடன் ஜோடி சேர்வதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் கதை மிக பிடித்துப்போனதால் மட்டுமே.

Trending News