சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

காமெடியை தாண்டி வில்லனாக வெற்றிக்கண்ட நாகேஷ்.. மோசமாக அலறவிட்ட 4 படங்களின் லிஸ்ட்

நாகேஷ் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இவர் வில்லனாக நடித்த 4 படங்கள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும். நாகேஷ் வில்லனாக நடித்த படங்களின் பட்டியல் இதோ

nagesh
nagesh

அதிசய பிறவி: ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் அதிசய பிறவி. இப்படத்தில் கனகா மற்றும் தீபாஆக்ஷதீப் ஆகியோர் நடித்துள்ளனர். பல படங்களில் காமெடியனாக நடித்த நாகேஷ் இப்படத்தில் வில்லனாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அபூர்வ சகோதரர்கள்: கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் கௌதமி நடித்துள்ளார். மேலும் நாகேஷ் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் திரை வாழ்க்கையிலேயே மிக முக்கியமாக படமாக உள்ளது. இப்படத்தில் நாகேஷின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து இன்றும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மௌனம் சம்மதம்: மம்முட்டி நடிப்பில் உருவான திரைப்படம் மௌனம் சம்மதம். இப்படத்தில் அமலா நடித்துள்ளார். மேலும் சரத்குமார் மற்றும் ஜெய்சங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நாகேஷ் வில்லனாக நடித்துள்ளார். இவரது வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

சேரன் பாண்டியன்: விஜயகுமார் மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் சேரன் பாண்டியன். இப்படத்தில் ஸ்ரீஜா,சித்ரா, நாகேஷ் மற்றும் ஆனந்த் பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக நாகேஷ் நடித்துள்ளார். வில்லனாக இவர் நடித்த காட்சிகள் அனைத்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

Trending News