எம்ஜிஆருக்காக பாலச்சந்தரை பகைத்துக் கொண்ட நாகேஷ்.. பூதாகரமாக வெடித்த சண்டை

இயக்குனர் இமயம் பாலச்சந்தர் மற்றும் நாகேஷ் இடையே நீண்ட கால உறவு இருந்தது. பாமா விஜயம், எதிர்நீச்சல் என நாகேஷுக்கு நல்ல கதாபாத்திரங்களை கொடுத்து சினிமாவில் வளர்த்து விட்டதில் பாலச்சந்தருக்கும் முக்கிய பங்கு உண்டு. அதன்பின்பு தனது திறமையால் நாகேஷ் சினிமாவில் ஜொலித்தார்.

இப்படி நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் ஒரு பூதாகர சண்டை வெடித்தது. அதாவது பாலச்சந்தர் வெள்ளி விழா என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். இந்த படத்தில் ஜெமினி கணேசன், மனோரமா, வாணிஸ்ரீ போன்ற பிரபலங்களும் நடித்து வந்தனர். இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க நாகேஷ் ஒப்பந்தமாக இருந்தார்.

Also Read : எல்லோரைப் போல் நாகேஷ்க்கும் வந்த ஆசை.. அதிர்ஷ்டத்தை பயன்படுத்தாமல் விட்ட சோகம்

இந்நிலையில் படப்பிடிப்புக்காக பாலச்சந்தர் வந்துவிட்டார். ஆனால் பல மணி நேரம் ஆகியும் நாகேஷ் படப்பிடிப்புக்கு வரவில்லையாம். அந்த சமயத்தில் நாகேஷ் அழைக்க சென்றிருந்த ப்ரொடக்ஷன் மேனேஜர் ஸ்டுடியோக்குள் நுழைந்துள்ளார். அப்போது நாகேஷ் எங்கே என்று பாலச்சந்தர் அவரிடம் கேட்டுள்ளார்.

இன்று எம்ஜிஆர் பட சூட்டிங்க்காக நாகேஷ் சென்றுவிட்டார், அதனால் இங்கு வரமாட்டார் என்ற ப்ரொடக்ஷன் மேனேஜர் கூறியுள்ளார். இதனால் உச்சகட்ட கோபம் அடைந்துள்ளார் பாலச்சந்தர். மேலும் புரொடக்ஷன் மேனேஜர் நாகேஷ் வீட்டுக்கு செல்லும்போது எம்ஜிஆர் படத்தின் இயக்குனர் அவரை அழைக்க வந்துள்ளார்.

Also Read : தேசிய விருது வாங்கிய முதல் 5 தமிழ் படங்கள்.. சிவாஜியை முந்திய எம்ஜிஆர்

இதனால் நாகேஷ் ப்ரொடக்ஷன் மேனேஜர் இடம் அந்தப் படத்தின் இயக்குனரே என்னை அழைக்க வந்திருக்கிறார், இங்கு நீ தான் வந்திருக்கிறாய் நான் யாருடன் போவது நீயே சொல் என்று நாகேஷ் சொல்லிவிட்டு எம் ஜி ஆர் படப்பிடிப்புக்கு சென்று விட்டதாக பாலச்சந்தரிடம் கூறியுள்ளார்.

எனது நாகேஷ் அழைக்க நானே போக வேண்டுமா என்று கடும் கோபத்தில் இந்த படத்தில் இருந்து பாலச்சந்தர் அவரை தூக்கி விட்டார். அதன் பின்பு தயாரிப்பாளரை அழைத்து நாகேஷ் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தேங்காய் சீனிவாசனை போடச் சொல்லி உள்ளார். அதன் பின்பு தான் வெள்ளி விழா படத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தார்.

இந்த பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக நாகேஷ் மற்றும் பாலச்சந்தர் ஒரு படத்தில் கூட இணையாமல் இருந்தனர். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இவர்கள் இருவரும் பேசாமல் இருந்தனர். அதன் பின்பு பாலச்சந்தர் முன்வந்து தன்னுடைய அபூர்வ ராகங்கள் படத்தில் நாகேஷை நடிக்க வைத்தார்.

Also Read : எங்களுக்கும் காமெடி வரும் என நகைச்சுவையில் கலக்கிய 5 நடிகைகள்.. தேங்காய் சீனிவாசனை அலறவிட்ட சௌகார் ஜானகி