புதன்கிழமை, ஜனவரி 1, 2025

ரயில்வே கிளார்க் வேலை பார்த்த காமெடி நடிகர்.. சினிமாவின் உச்சத்திற்கு சென்ற பிரபலம்

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் பல படங்களில் நடித்து உள்ளனர். ஆனால் ஒரு சில காமெடி நடிகர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. அப்படி ஒரு தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நாகேஷ்.

நாகேஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே காமெடி காட்சிகள் பெரிய வெற்றி பெற்றன. ஒரு கட்டத்திற்கு பிறகு நாகேஷ்காகவே படத்தை பார்க்க கூடிய ரசிகர்கள் அன்றைய காலகட்டத்தில் உருவாக்கினார்.

எம்ஜிஆர் படங்களில் நாகேஷ் அதிகமாக நடித்திருப்பார். அதற்கு காரணம் எம்ஜிஆர் அவருக்கு அதிக படங்களில் வாய்ப்பு கொடுத்தார். அன்றைய காலகட்டத்தில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஒரே காமெடி நடிகர் நாகேஷ்.

nagesh
nagesh

இவருக்கு அதன் பிறகு ஒரு சில ஹீரோவாக நடிப்பதற்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சர்வர் சுந்தரம்.

இப்படம் அன்றைய காலத்தில் சக்கை போடு போட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவ்வளவு வெற்றிக்கு சொந்தக்காரரான நாகேஷ் ஆரம்ப காலத்தில் ரயில்வே துறையில் வேலை பார்த்துள்ளார்.

பின்பு நாடகத் துறையில் பணியாற்றி விட்டு அதன் பிறகுதான் சினிமா துறையில் நுழைந்து தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

Trending News