நாகினி 3 என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் பியர்ல் வி புரி. மும்பை சேர்ந்த இவர் சிறுமி ஒருவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதற்கான வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாகினி 3 சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ள சாமுராய் படஹீரோயின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்றும், யாரோ அவர் பெயரை கெடுப்பதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் மூலம் பிரபலமாகி தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருபவர் யாஷிகா.
அவரும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார், தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு தெரிந்த நல்ல மனம் கொண்ட மனிதர்களில் இவரும் ஒருவர். ஆதலால் உண்மை தெரியும் வரை காத்திருக்கலாம்.
என் நண்பர் திரும்பி வரும் வரை காத்திருப்பேன் என்றும் வருத்ததுடன் பதிவிட்டுள்ளார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில் யாஷிகா வெளியிட்டுள்ள இந்த பதிவு ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பியர்ல் வி புரி அதிகமான ரசிகர்கள் உள்ளனர், நாகினி சீரியல் 3-ம் பாகம் மட்டுமில்லாமல் நாகார்ஜுனா ஏக் யோதா, பேபனா பியார், பிரம்மரக்ஷாஸ் 2 உள்ளிட்ட ஏகப்பட்ட தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.
இவர் புகழை கெடுக்கும் வகையில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தினால் ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். எது எப்படியோ விசாரணையை முடிந்தால் தான் உண்மை தெரியவரும்.
