சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

நக்மா நடித்த நச்சினு 4 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய செம லிஸ்ட்

முதல் படத்திலேயே வெற்றிக்கொடி நாட்டிய லிஸ்டில் நடிகை நக்மா கண்டிப்பாக வருவார். அதன்பின் அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதுவும் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய நடிகர்களான ரஜினி, கார்த்திக், சத்யராஜ், போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பெயர் புகழ் பெற்றார். இதில் நக்மா நடித்த முக்கியமான நான்கு படங்களை பற்றி பார்க்கலாம்.

காதலன்

shankar-kadhalan
shankar-kadhalan

இயக்குனர் ஷங்கர் எடுத்த இரண்டாவது படம். மிக பிரம்மாண்டமாக பெயரெடுத்து புகழ்பெற்ற இயக்குனர், ஆனால் தனது இரண்டாவது படத்தில் பெரிய அளவில் புகழ் அடையாமல் இருந்த பிரபுதேவா நக்மா போன்ற புதுமுகங்களை வைத்து கவனமாக படமெடுத்து வெற்றி கொடுத்தார்.

இந்த படத்தில் பிரபுதேவா நக்மா இருவரும் உண்மையான காதலர்கள் போலவே நடித்து இருந்தனர். இந்த படத்தில் இருந்து நக்மாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் வந்தது. காதலன் படத்தில் அவருடைய குரலும் அழகும் அருமையாக இருந்ததால் படத்தில் அவரை ரசிக்காதவர்கள் இல்லை. அவருடைய நடனமும் சொல்லவே தேவையில்லை.

மேட்டுக்குடி

mettukudi
mettukudi

சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி, நக்மா போன்றவர்கள் நடித்த படம் மேட்டுக்குடி. இந்த படத்திலும் நக்மா நடிகர் கார்த்திக்கிற்கு இணையாக நன்றாக நடித்து பெயர் பெற்றார். படமும் அற்புதமாக ஓடியது.

முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இந்தப் படம் வெற்றியடைய முக்கியமான காரணம் கவுண்டமணி, கார்த்திக், நக்மா. மேட்டுக்குடி படமும் நக்மாவின் கேரியரில் மிக முக்கியமான படம்.

பிஸ்தா

pistha
pistha

மேட்டுக்குடி அடைந்த வெற்றிக்கு பின் மீண்டும் கார்த்திக்குடன் இணைந்தார் நக்மா. ஆனால் இந்த படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்தார். இந்தப் படமும் மிக பெரிய வெற்றி பெற்ற நகைச்சுவைப் படம். இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. அதே நேரத்தில் நடிகர் மௌலியின் காமெடியும் கார்த்திக் நடிக்கும் இந்த படத்தின் வெற்றிக்கு மிகவும் உதவியது.

பாட்ஷா

Baasha
Baasha

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நக்மாவின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த காலகட்டத்தில் ரஜினியுடன் சேரும் வாய்ப்பு மிக விரைவிலேயே கிடைத்தது. அதுவும் ரஜினிகாந்தின் முக்கியமான படமான பாட்ஷா படத்தில் இணையும் வாய்ப்பு கிடைத்தது.

இன்று அல்ல இன்னும் 50 வருடங்களில் இந்த படத்தை பற்றி பேசினாலும் அந்தப் படத்தில் நடித்த நக்மா விற்கும் ஒரு பங்கு உண்டு. படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லத் தேவையில்லை வரலாற்று வெற்றி.

Trending News