புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன மீனாவின் மகள்.. வைரலாகும் தெறி பேபி நைனிகா!

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் மீனா. இவருடன் ஜோடியாக நடிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போட்டனர். ஆனால் ஒரு சில நடிகருடன் மட்டுமே ஜோடி போட்டு விட்டு பின்பு திரைஉலகத்தை விட்டு விலகி விட்டார்.

என்னதான் மீனா திரையுலகை விட்டு விலகினாலும் அவரது வாரிசு திரையுலகில் தெறி படத்தின் மூலம் மகளான நைனிகா அறிமுகப்படுத்தி வைத்தார்.

விஜயுடன் நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று நைனிகாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாகவே அமைந்தது. அதன் பிறகு அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இரண்டு படங்கள் சிறு குழந்தையாகநடித்த நைனிகா தற்போது மளமளவென வளர்ந்து விட்டார். நேற்று மீனா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

nainika
nainika

தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம நைனிகாவா இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Trending News