வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அந்த விஷயத்திற்காக அழையும் ஸ்ரீநிதி.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நட்சத்திரா

கடந்த சில நாட்களாக சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முதலில் சிம்பு தன்னை காதலிப்பதாக அவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்ரீநிதி பதிவிட்டிருந்தார். அதை பார்த்த சிம்பு ரசிகர்கள் இவரை கண்டபடி திட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீநிதியின் சக நடிகை மற்றும் தோழியான நக்ஷத்ரா பற்றி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். யாரடி நீ மோகினி தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நட்சத்திரா. இவருடைய தோழிகளுக்கு திருமணம் ஆன நிலையில் இவர் மட்டுமே சிங்கிளாக உள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீநிதி கூறிய வீடியோவில், நக்ஷத்ராவுக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான். தற்போது நட்சத்திரா ஒருவரை காதலிக்கிறார். ஆனால் நக்ஷத்ராவின் காதலர் நல்லவர் இல்லை, அவரது குடும்பமே நட்சத்ராவை ஏமாற்றுகிறது. அதை தட்டிகேட்க போனால் என்னையும் திட்டுகிறார்கள்.

விஜே சித்ராவுக்கு ஏற்பட்ட நிலைமை நட்சத்திரத்துக்கும் வரக்கூடாது என அழுது கொண்டே அந்த வீடியோவில் ஸ்ரீநிதி பேசியிருந்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த வீடியோவையும் நீக்கி இருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் இணையத்தில் பூதாகரமாக வெடித்தது. தற்போது இதைப்பற்றி நட்சத்ரா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார்.

அதாவது நான் நன்றாக இருக்கிறேன். எப்போதும்போல தினமும் ஷூட்டிங்குக்கு சென்று வருகிறேன். ஸ்ரீநிதியை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்பவர்களுக்கு தெரியும். சில நாட்களாகவே ஸ்ரீநிதி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அதனால் அவர் சொல்லும் விஷயங்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தேன்.

சில நாட்களாக பலரும் தொலைபேசியில் அழைத்து எப்படி இருக்கிறீர்கள் என கேட்கிறார்கள். யாரும் பயப்பட வேண்டாம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என நட்சத்ரா ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நட்சத்ரா ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் ஸ்ரீநிதி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள தான் இப்படி செய்கிறார் என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Trending News