தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே காலம் கடந்தும் பேச படுவார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய அசாத்தியமான நடிப்பும், திறமையும் தான். அப்படி காலம் கடந்து பேசப்படும் நடிகர் நம்பியார்.
எம்ஜிஆர் காலத்திலேயே எம்ஜிஆருக்கு மேல ரசிகர்கள் கொண்டாடியது நம்பியார் தான். ஏனென்றால் அன்றைய காலத்தில் எம்ஜிஆர் அளவிற்கு நம்பியிருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
அதற்கு காரணம் அவருடைய ஒவ்வொரு நடிப்பும் ரசிகர்கள் கொண்டாட கூடிய அளவிற்கு பிரமிக்க வைத்தது. நம்பியாரை பல ரசிகர்கள் கொண்டாடினாலும் ஒரு சில ரசிகர்கள் இவரை திரையுலகில் வில்லனாக பார்த்ததால் நிஜ வாழ்க்கையிலும் இவர் வில்லனாக நினைத்தார்கள்.
எங்கேயாவது வெளியே நம்பியர் சென்றால் அவரை பார்க்கும் ரசிகர்கள் ஒரு சிலர் ஓடிப்போய் ஒளிந்து கொள்வார்கள். அந்த அளவிற்கு இவருடைய வில்லத்தனம் நடிப்பு அவர்களை அதிகம் தாக்கியது.
ஆனால் நம்பியார் மற்ற நடிகர்கள் போல் திரையில் நல்லவர்களாகவும் நிஜவாழ்க்கையில் கெட்டவராக இல்லாமல். திரையில் கெட்டவராகவும் நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதராகவும் பிற்காலத்தில் ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.
ஏன் இப்போது வரை இவர் நிஜவாழ்க்கையில் நல்லவர் கடவுள் மீது பக்தி உள்ளவர் என்பது பலருக்கும் தெரியும் அதற்கு காரணம் அவரது நடிப்பை தாண்டி அவருடைய நல்ல குணம் தான்.
அதனால் அப்போது நம்பியாரை திரையுலகில் ராவணன் நிஜ உலகில் ராமன் என ரசிகர்களால் பாராட்டைப் பெற்றார்.