தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்தவர் எம்ஜிஆர். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலுமே ரசிகருக்கு ஆதரவாக பேசி ரசிகர்களை கொண்டாட கூடியவராக நடித்திருப்பார்.
அதனாலேயே பல ரசிகர்களும் மக்கள் திலகம் எம்ஜிஆர் என அன்றைய காலத்தில் பாச மழையைப் பொழிந்தனர். அதுமட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் களத்தில் குதித்து மக்களுக்கு சேவையும் செய்தார்.
எம்ஜிஆருக்கு இணையாக அன்றைய காலத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நம்பியார். சிவாஜி கணேசன் எம்ஜிஆருக்கு போட்டியாக பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் நடிப்பில் சிறந்தவர் என சிவாஜி கணேசன் பெயர் பெற்றார்.
அதேபோல் நம்பியாரும் அன்றைய காலத்தில் தனக்கென ஒரு சில ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தார். இதுவரைக்கும் நம்பியார் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது வில்லன் கதாபாத்திரம் தான்.
ஏனென்றால் வில்லன் கதாபாத்திரத்திற்கு பெயர் பெற்றவர் தான் நம்பியார். ஆனால் இவர் தனிப்பிறவி என்ற படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். நம்பியாருக்கு மகளாக ஜெயலலிதாவும், நம்பியாருக்கு வில்லனாக எம்ஜிஆர் நடித்துள்ளார்.
ஆனால் நம்பியார் ஹீரோவாகவும் எம்ஜிஆர் வில்லனாகவும் நடித்த கதாபாத்திரம் பலருக்கும் தெரியாது.