புருவத்தை ஏத்தி கைகளை பிசைந்து இவருடைய நடிப்பிற்கு பயப்படாத ஆட்களே கிடையாது என்று கூட கூறலாம். நான் யாரைசொல்கிறேன் என்பதைப்புரிந்து கொண்டிருப்பீர்கள் ஆம் இன்று நாம் பார்க்கப்போவது நம்பியார் தான்.

நம்பியார் கண்ணூர் மாவட்டம் கேரளா மாநிலத்தில் பிறந்து தனது அசார்த்திய திறமையால் வில்லனாக தமிழ்சினிமாவில் கொடியேற்றினார். அசோகன், வீரப்பா மற்றும் மனோகர் போன்ற வில்லன்கள் இருந்த காலத்திலேயே தனது வில்லத்தனத்தை சினிமாவில் வெளிப்படுத்தினார். இவர்களைப் போலவே தனக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அந்த அளவிற்கு இவரது வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
நாடக குழுவில் நம்பியார் சமையல் வேலை செய்துள்ளார். அப்போது இலவசமாக உணவு மற்றும் தூங்குவதற்கு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. திரை வாழ்க்கையில் வில்லனாக நடித்த நம்பியார் நிஜ வாழ்க்கையில் மிகவும் கடவுள் பக்தி உடையவராக இருந்துள்ளார்.

65 ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்கு மாலை போட்டு சென்றுள்ளார். அதனால் இவரை குருசாமி கெல்லாம் குருசாமி என அழைத்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ராஜ்குமார் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற இந்திய நடிகர்கள் அனைவரையும் பல கோயில்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
எம்ஜிஆருடன் இவர் பல படங்கள் நடித்துள்ளார், வில்லனாக நம்பியார் நடித்த சர்வாதிகாரி,விவசாயி, உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் இவர் வில்லனாக அசத்தியிருப்பார். திரையில் நம்பியாரை வில்லனாக பார்த்த மக்கள் நிஜத்திலும் இவர் வில்லன்தான் என நினைத்து அவரை வெறுத்து ஒதுக்கினார்கள். ஆனால் நிஜத்தில் இவர் வில்லன் இல்லை என்பது சிறிது காலத்திற்கு பிறகு அனைவரும் தெரியவந்தது.