தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் மறக்கமுடியாத நடிகை தான் நடிகை நமீதா. இவர் தமிழ், கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் எக்கச்சக்கமான படங்கள் நடித்திருந்தாலும், அல்டிமேட் ஸ்டார் அஜித் உடன் நடித்த பில்லா படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
நமீதாவின் கவர்ச்சி மற்றும் கொஞ்சல் பேச்சுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் ‘மச்சான்ஸ் மறந்துடாதீங்க!’ என்பது இவருடைய பேமஸ் டயலாக். இருப்பினும் தன்னுடைய ரசிகர்கள் எல்லோரையும் ஏங்கித் தவிக்க விட்டுவிட்டு,
கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்ட நமீதாவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் நமீதா, தன்னுடைய ரசிகர்களுக்கு அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தனது 17 ஆவது வயதில் எடுக்கப்பட்ட இளம்வயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் நமீதா ஆளே அடையாளம் தெரியாமல் ஒல்லியாக செம க்யூட்டாக காட்சியளிக்கிறார்.
மேலும் இந்த புகைப்படம் தான் அவர் முதல் முதலாக போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் என்பதை தன்னுடைய ரசிகர்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் நமிதாவா இது? என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.