வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எப்படி இருந்த நமீதா, இப்படி ஆகிட்டாங்களே.. வருத்தப்பட வைக்கும் அவரது சினிமா கேரியர்

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி கமர்சியல் நாயகியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவே நமீதாவை நம்பித்தான் இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.

அனைத்து முன்னணி நடிகர்களும் நமீதாவுடன் நடிக்க ஆர்வமாக இருந்தனர். அதுமட்டுமில்லாமல் வருங்காலத்தில் நமீதா அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

அங்குதான் அவருக்கு சரிவு தொடங்கியது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு நமீதா அதிமுகவில் சேர்ந்ததில் அவ்வளவு விருப்பம் இல்லை என பரவலாக ஒரு கருத்து உள்ளது. ஒரு மேடை சந்திப்புக்கு பிறகு தான் நமீதாவுக்கு படவாய்ப்புகள் குறைந்ததாம். சொந்தமாக படம் எடுக்கும் பெருசாக போகவில்லை. மாறாக சினிமாவிலும் சுத்தமாக வாய்ப்புகள் இல்லை.

கடந்த சில வருடங்களாகவே சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நமீதா தற்போது சீரியலில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். முன்னதாக சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஜீ தமிழில் தேவயானி நடிப்பில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் ஒன்றில் கெஸ்ட் ரோலில் வலம் வந்த நமீதாவை வைத்து ஜீ தமிழ் நிறுவனம் ஒரு பெரிய சீரியல் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்னோட்டமாகவே தேவயானி சீரியலில் நமீதா வந்ததாகவும் கூறுகின்றனர். ஒருகாலத்தில் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த நான் இப்போது சீரியலுக்கு வந்து விட்டேனே என தன்னுடைய வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம் நமீதா.

namitha-cinemapettai-01
namitha-cinemapettai-01

Trending News