இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தனித்துவமான படங்களை வழங்குவதில் மிஷ்கினை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றுதான் கூறவேண்டும். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் புதிதாக ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாருமல்ல நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி தான். நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் தொடரில் நடித்து பிரபலமடைந்தவர்.
முன்னதாக ஜெய் மற்றும் வாணிபோஜன் நடிப்பில் வெளியான டிரிப்பில்ஸ் தொடரிலும் நமீதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
