செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நமிதாவிற்கு முத்தம் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்.. அடிச்சு துரத்தியும் அடங்க மாட்டீங்களா

நமிதா மாரிமுத்து நாடோடிகள் 2 படத்தில் நடித்துள்ளார். அதனால் விஜய் டிவியில் உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதுவரை எந்த ஒரு திருநங்கையின் செய்யாத பல சாதனைகளை நமிதா மாரிமுத்து செய்துள்ளார். அதாவது இவர் திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

மேலும் அவ்வப்போது சமுதாயத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பது. ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது என தொடர்ந்து பலருக்கும் உதவி செய்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு முதலில் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை வெளிப்படையாக கூறி இருந்தார்.

இது பலருக்கும் கண்கலங்க வைத்தது மேலும் திருநங்கைகள் படும் கஷ்டத்தையும் வெளிப்படையாக கூறி இருந்தார். மேலும் வீட்டில் இருப்பவர்கள் திருநங்கைகளை ஒதுக்காமல் இருந்தால் கண்டிப்பாக அவர்களும் இவ்வுலகில் சாதிக்க முடியும் என வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் நமிதா மாரிமுத்துவின் கஷ்டத்தை பார்த்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர்.

namitha marimuthu
namitha marimuthu

ஆனால் எதிர்பாராதவிதமாக இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். நல்லபடியான மக்கள் வாக்குகளை பெற்று சுருதி கடந்தவாரம் வெளியேறினார். இதற்கு காரணம்  தாமரை காயினை எடுப்பதற்கு தவறான யுக்தியை பயன்படுத்தியது தான்.

தற்போது இவர் வெளியேறிய பின் முதல்முறையாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும் திருநங்கை நமீதாவுடன் கன்னத்தில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து பிக்பாஸ் அடித்து துரத்தியும் நீங்க அடங்க மாட்டீங்களா என்பது போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Trending News