வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மன உளைச்சலில் தற்கொலை வரை சென்ற நமீதா.. உச்சி குளிர சொன்ன சந்தோசமான செய்தி

விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆனால் அதன் பின்பு உடல் எடை அதிகமானதால் படவாய்ப்புகள் இவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அதன்பின்பு திரைப்படங்களிலேயே அவரைப் பார்க்க முடியவில்லை.

ஆனால் சில வருடங்களுக்குப் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இந்நிலையில் நமிதா தயாரிப்பாளரான வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி சில வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற செய்திகளும் வெளியானது. ஆனால் தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடம்பை குறைத்துள்ளார். அத்துடன் தான் 7 மாதம் கர்ப்பமாக உள்ள செய்தியையும் புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.

தற்போது நமீதாவின் இந்த கர்ப்பக்கால புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் நமிதாவிற்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். மேலும் இன்று அவருடைய பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

namitha
namitha

Trending News