வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குடியால் தற்கொலை செய்து கொள்ளப் போனாரா நமீதா? 6 வருடமாக பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சம் இல்லையாம்

எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நமீதா அதன் பிறகு தென் இந்திய சினிமாவையே தன் கைக்குள் வைத்திருந்த காலமெல்லாம் உண்டு. பல வருடங்கள் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் நமீதா.

ஆனால் திடீரென சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்ததால் ரசிகர்கள் நமீதாவை கண்டு கொள்ளவில்லை. ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் தான் நமீதா சினிமாவை விட்டு ஒதுங்கியதாக செய்திகள் வந்தன.

மேலும் நமீதா குடிக்கு அடிமையானவர் என்பது போன்ற பிம்பத்தையும் ஏற்படுத்தி விட்டார்களாம். அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லையாம். நமீதாவுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகள் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக சினைப்பை மற்றும் தைராய்டு போன்ற பிரச்சனைகள் அளவுக்கு அதிகமாக இருந்ததாம்.

இதனால் கிட்டத்தட்ட 97 கிலோ எடை கூடி விட்டாராம். பின்னர் தன்னுடைய எடையை குறைக்க முடியாமலும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமலும் தடுமாறியதால் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அதற்காக சில முயற்சிகள் கூட செய்துள்ளார் நமீதா.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக தனிமையில் தவித்து வந்துள்ளார் நமீதா. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நரக வேதனையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு தியானத்தில் ஈடுபட்டாராம். அதன் பிறகுதான் மன அமைதி கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

namitha-cinemapettai-01
namitha-cinemapettai-01

மேலும் வீரேந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நமக்கான சந்தோஷம் நமக்குள்ளேயே தான் இருக்கிறது என்பதையும் ஞானி போல கூறியுள்ளார் நமீதா.

Trending News