வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

Singapenne: சிங்கப்பெண்ணே: சுக்கு நூறாக உடைய போகும் அன்பு, மகேஷ்.. மித்ரா நீ கெட்டிக்காரி தாம்மா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலை இனி பார்க்கலாமா வேண்டாமா என இந்த வாரம் தெரிந்து விடும். இன்றைய ப்ரோமோவை பார்த்த இந்த சீரியலின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக சொன்ன கருத்து இதுதான்.

ஒரு சீரியலில் வில்லியாக நடிப்பவர் ரசிகர்களிடம் திட்டு வாங்குவது என்பது சகஜமாக நடக்கும் விஷயம்தான். ஆனால் இந்த சீரியலில் தான் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் ஆனந்தி தினமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்.

கள்ளம் கபடம் இல்லாத பெண்ணாக காட்ட வேண்டும் என்பதெல்லாம் சரிதான், அதற்கு இப்படி ஒரு மங்குனி தனமாகவா இருக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் குற்றச்சாட்டு. எப்போதாவது வில்லி மித்ரா ஜெயிச்சா பரவாயில்ல, எப்பவுமே அந்த பொண்ணு தான் ஜெயிச்சுக்கிட்டு இருக்கும்னா எதுக்கு அந்த நாடகத்தை பாக்கணும் தான் தோணுது.

எல்லா பிளானுக்கும் உச்சகட்டமாக இன்றைய எபிசோடில் நந்தா நான் தான் அழகன் என்று ஆனந்தி முன்னாடி வர இருக்கிறான். ஒரு பக்கம் அன்பு ஆனந்தி, அழகனுக்காக காத்திருக்கும் கோவிலுக்கு விரைந்து வருகிறான்.

அதே நேரத்தில் நந்தா மற்றும் ஆனந்தியை, மகேஷ் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பதற்காக அதை கோவிலுக்கு மித்ரா அவனை அழைத்து வருகிறாள். இதில் என்ன கொடுமை என்றால் இன்றைய ப்ரோமோவில் நந்தா தன்னை அழகனாக ஆனந்தி முன் காட்டிக் கொள்வது போல் முடிக்கப்பட்டு இருக்கிறது.

கடவுளே! இது மட்டும் நடக்கவே கூடாது

இது மட்டும் நடந்து விட்டால் இந்த சீரியலுக்கு இன்னையோட பூசணிக்காய் உடைத்து விட வேண்டியது தான். இது மித்ராவின் கனவாக மட்டும் தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே அன்புவின் அன்பை புரிந்து கொள்ளாமல், அவனை வெறுத்து ஒதுக்கும் ஆனந்தியை பார்க்கும் போது எரிச்சலாக வருகிறது. இதில் நந்தா தான் அழகன் என்று தெரிந்து கொண்டு அதில் ஏதாவது ட்விஸ்ட் வைத்தால் கண்டிப்பாக இந்த சீரியலை பார்ப்பவர்களுக்கு பிபி ஏறி விடும்.

கொஞ்சமாவது ரசிகர்களின் விருப்பு வெறுப்பை தெரிந்து கொண்டு டைரக்டர் இந்த அழகன் டிராக்கை மாற்றி எடுத்தால் நன்றாக இருக்கும். ஆனந்தி யாரை அழகனாக பார்க்கப் போகிறாள், அன்புவின் உண்மையான காதலை புரிந்து கொள்வாளா என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியும்.

Trending News