வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆனந்தியை லாக் பண்ண நந்தா போடும் பிளான்.. போலி அழகனின் தோலுரிக்க போகும் அன்பு

Singapenne: சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் நேற்றைய எபிசோடு ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். நந்தா யார் என்று கிட்டத்தட்ட அன்பு கண்டுபிடித்து விடுவான் என்ற நம்பிக்கையை கொடுத்து கடைசியில் அது இல்லாமல் போய்விட்டது.

நந்தாவின் புகைப்படத்தை காட்ட வந்த அந்த பேங்க் மேனேஜர் மயக்கம் போட்டு விழுந்தது மட்டுமில்லாமல், போன் டிஸ்ப்ளே உடைந்து விட்டது என சொல்லும்போது அட போங்கடா என்று தான் இருந்தது. இன்னொரு பக்கம் நந்தா வணக்கம் போல தன்னுடைய காதல் செண்டிமெண்ட் டயலாக்குகளை அச்சு பிசறாமல் ஆனந்தியிடம் கொட்டி தீர்த்துக் கொண்டிருந்தான்.

ஆனந்தியை லாக் பண்ண நந்தா போடும் பிளான்

உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நந்தா சொல்ல ஆனந்தி இல்லை என் அக்காவுக்கு கல்யாணம் ஆன பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறாள். அதற்கு நந்தா நான் உடனே திருமணம் செய்து கொள்ள கூடிய சூழ்நிலையில் இருக்கிறேன் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என ஆனந்தியை மிரட்டுகிறான்.

ஆனந்தி என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் மித்ரா நந்தாவை அழைத்து மகேஷின் அப்பா அம்மா கல்யாண விழா பார்ட்டிக்கு முன்னாடியே மகேஷ் ஆனந்தியை வெறுக்க வேண்டும் என சொல்கிறாள்.

அதற்கு நந்தா ஒரு பட்டுப்புடவையை காட்டி எனக்கும் ஆனந்திக்கும் அந்த கல்யாண நாள் பார்ட்டிக்கு முந்தைய நாளே கல்யாணம் ஆகிவிடும் என சொல்கிறான். இது மித்ராவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. கம்பெனியில் மகேஷ் ஆனந்தியை கூப்பிட்டு அவன் வாங்கி வைத்திருந்த புடவையை கொடுத்து கல்யாண பார்ட்டிக்கு அவளை வரச் சொல்கிறான்.

இன்னொரு பக்கம் அன்பு அழகன் என்ற பெயரில் யார் ஆனந்தியை ஏமாற்றுகிறார் என்பதை தெரிந்து கொள்ள தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இன்றைய ப்ரோமோவில் ஹாஸ்டலில் ஆனந்தி மற்றும் மித்ராவின் தோழிகளுக்கு இடையே சண்டை வருவது போல் காட்டப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் நந்தா தன்னுடைய பிளானை நிறைவேற்ற தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறான்.

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

Trending News