வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மூன்று முடிச்சு சீரியலில் சுந்தரவல்லியை மன்ன கவ்வ வைத்த சூர்யா.. புருஷனாக ஏற்றுக் கொள்ளப் போகும் நந்தினி

Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், நந்தினி என் வீட்டு மருமகளாகவும் இருக்கக் கூடாது என் பிள்ளைக்கு மனைவியாகவும் இருக்கக் கூடாது என்ற நினைப்பில் சுந்தரவல்லி, சுதாகர் மூலம் காய் நகர்த்தினார். இந்த சமயத்தில் சூர்யா, நந்தினி குடும்பத்துடன் கிராமத்தில் பொங்கலை சந்தோஷமாக கொண்டாடினார்.

அப்பொழுது அங்கே ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி நந்தினியை நிரந்தரமாக ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று சுதாகர் பிளான் பண்ணினார். அதனால் நந்தினி தங்கச்சியிடம் வம்பு இழுத்தவரை நந்தினி தடுத்து அடிக்க பார்த்தார். அப்பொழுது உள்ளே புகுந்த சுதாகர், அந்த நபரை தள்ளிவிட்டு கொலை செய்து விட்டார். இது யாருக்கும் தெரியாததால் நந்தினி தான் இந்த கொலையே பண்ணி இருக்கிறார் என்று போலீஸ் முடிவு பண்ணி நந்தினியை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விட்டார்கள்.

போலீஸ் ஸ்டேஷனில் நந்தினியை காப்பாற்றுவதற்காக அருணாச்சலம் மற்றும் சூர்யா இருந்தார்கள். ஆனால் அங்கே வந்த சுந்தரவல்லி வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி நந்தினியை அவமானப்படுத்தி சூர்யா மற்றும் அருணாச்சலத்தை வீட்டுக்கு கூட்டிட்டு போக நினைத்தார். இதை எல்லாம் பார்த்து நந்தினி, யாரும் இங்கே இருக்க வேண்டாம். எங்க வீட்டு பிரச்சனையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி மாமனாரையும் சூர்யாவையும் அனுப்பி வைத்து விடுகிறார்.

பிறகு சூர்யாவின் அப்பா, சூர்யாவிடம் ஜாமீன் எடுப்பதற்கு நீ முயற்சி செய். நான் உங்க அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று சொல்லி விடுகிறார். அதன்படி சூர்யா போய்க் கொண்டிருக்கும் பொழுது அவருடைய போனில் கிராமத்தில் கொண்டாடிய பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சி வீடியோ இருந்தது. அதை பார்க்கும் பொழுது சுதாகர் தான் அந்த கொலை செய்திருக்கிறார் என்ற ஆதாரம் அவருக்கு கிடைத்து விடுகிறது.

உடனே கிராமத்திற்கு சென்ற சூர்யா, அந்த சுதாகரனை அடித்து போலீஸ் ஸ்டேஷன் இடம் ஒப்படைத்து ஆதாரத்தை காட்டிவிட்டு நந்தினி மீது எந்த தப்பும் இல்லை என்று நிரூபித்துவிட்டு நந்தினியை கூட்டிட்டு வந்து விடுகிறார். இது எதுவும் தெரியாத சுந்தரவல்லி, இனி நந்தினி நம் பக்கமே வர மாட்டார் என்ற சந்தோஷத்தில் சூர்யாவுக்கு ஆரத்தி எடுப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் சூர்யாவும் வந்து விடுகிறார். உடனே சுந்தரவல்லி சந்தோஷத்தில் பையனுக்கு ஆர்த்தி எடுக்க தயாராகி விட்டார். ஆனால் அங்குதான் சூர்யா மாஸ் காட்டும் அளவிற்கு நந்தினியை காரில் இருந்து இறக்கி சுந்தரவல்லி முகத்தில் கரியை பூசி மன்னக்கவ்வ வைத்து விட்டார். நந்தினியை பார்த்த அதிர்ச்சியில் சுந்தரவல்லி எதுவும் பேசாமல் வீட்டிற்குள் போய் புலம்புகிறார்.

அத்துடன் மகனையும் மருமகளுக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்ற அருணாச்சலம் நீதான் இந்த வீட்டு மருமகள். உன்னை இந்த வீட்டை விட்டு போக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று வாக்கு கொடுத்து சூர்யாவுடன் சந்தோஷமாக வாழ வாழ்த்தி அனுப்புகிறார். இதையெல்லாம் தொடர்ந்து சூர்யா என்ன தான் வலுக்கட்டாயமாக நமக்கு தாலி கட்டி இருந்தாலும் தற்போது நமக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வந்து காப்பாற்றுவது சூர்யா தான் என்ற எண்ணம் நந்தினிக்கு வர ஆரம்பித்து விட்டது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சூர்யா காட்டும் பாசத்தை புரிந்து கொண்டு தன்னுடைய புருஷனாக நந்தினி ஏற்றுக் கொள்ளப் போகிறார். அதன் பிறகு தான் நந்தினியின் ஆட்டமும் சுந்தரவள்ளியின் அவஸ்தையும் இருக்கப்போகிறது.

Trending News