ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

சட்டையை ஒரு பக்கமா கழட்டி போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா.. வைரலாகும் கலர்புல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. இப்படத்தில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பு பெற்றது. அதன் பிறகு முண்டாசுப்பட்டி படமும் நல்ல வெற்றி பெற்றதையடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார்.

இவர் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த எதிர்நீச்சல், தேவி 2, கலகலப்பு 2 ஆகிய திரைப்படங்கள் மூலம் இவரது தனி திறமையை வெளிப்படுத்தினார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டானா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் இவரது திரை வாழ்க்கை சற்று சரித்து விட்டது என்றே கூறலாம்.

nandita swetha
nandita swetha

தற்போதுவரை இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது சற்று வருத்தம் தான். ஆனால் இவர் நயன்தாரா போல் முக்கிய கதாபாத்திரம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஐபிசி 376 என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகைகள் பலரும் பல விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது நந்திதா ஸ்வேதா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News