விஜய் மற்றும் நெப்போலியன் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான போக்கிரி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். பிரபுதேவா இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நெப்போலியன் விஜய் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இருவரும் தற்போது வரை பேசிக்கொள்வதில்லை என்ற பேச்சுக்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் நெப்போலியன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில்,சிவகார்த்திகேயன் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது கிளைமாக்ஸ் காட்சியில், துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு செல்வார்.
அன்று முதல் சிவகார்த்திகேயனை குட்டி தளபதி என்று தான் ரசிகர்கள் அழைக்கிறார்கள். இது மூத்த நடிகர்கள் பலருக்கு புகைச்சலை தான் ஏற்படுத்தியது. முக்கியமாக தனுஷ், அவர் அறிமுகம் செய்து வைத்த சிவகார்த்திகேயன், அவரை விட வசூலில் முன்னிலையில் இருக்கிறார்.
இதெல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகில்லை..
சூழ்நிலை இப்படி இருக்க, இந்த விவகாரம் தொடர்பாக நெப்போலியன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “தமிழகத்தின் மத்திய பகுதி திருச்சியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன், நடிச்சி இவ்வளவு சீக்கிரம் மேலே வந்துள்ளது பாராட்ட வேண்டிய விஷயம், சினிமாவில் ஆரோக்கியமான போட்டி இருக்கலாம்.”
“ஆனால் இங்கு பலர் வன்மத்தை மனதில் வைத்து கொண்டு சுற்றுகிறார்கள். இன்றைக்கு சிவகார்த்திகேயன் நடித்த படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமாக உள்ளது.மற்றவர்கள் அதைவிட சிறந்த படத்தை கொடுக்க முயற்சி செய்ய வேண்டும், அதை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் மீது பொறாமை படுவது, இழிவாக பேசுவது சரியில்லை” என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து சினிமா விமர்சகர் அந்தணன், “இந்த கருத்து இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? நீங்கள் சினிமா விட்டு விலகி வருட கணக்காகிறது. அமெரிக்காவில் உள்ளவருக்கு இங்கு உள்ள நிலைமை என்ன தெரியும்.. இப்படி பட்ட விஷயங்களை கண்டும் காணாமல் இருக்க வேண்டும்.. அதை விட்டு விமர்சிப்பது எல்லாம் பெரிய மனுஷனுக்கு அழகில்லை..” என்று விமர்சித்துள்ளார்.
இதை தொடர்ந்து குழம்பி போன ரசிகர்கள், “என்ன தான் சொல்ல வறீர்கள்? சப்போர்ட் செய்கிறீர்களா இல்லை எதிர்கிறீர்களா? ஒன்றும் புரியவில்லை” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.