வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மகனுக்கு வீடியோ காலில் நிச்சயதார்த்தத்தை முடித்த நெப்போலியன்.. தனுஷ் போட்ட பதிவு, வைரலாகும் போட்டோ

Nepoleon Son Engagement: தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்து அசத்தியவர் தான் நெப்போலியன். அப்படி நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அரசியலில் ஆர்வம் காட்டி மத்திய அமைச்சராக பணியாற்றினார். அதன் பின் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரெண்டு ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆனால் பிறந்த ஒரு குழந்தைக்கு தசை சிதைவு நோய் ஏற்பட்டதால் அவரை திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்தில் வைத்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். பின்னர் ஒரு மாற்றத்திற்காக மகனை அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணத்திற்கு கூட்டிட்டு போனார். அங்கே கூட்டிட்டு போன பிறகு அந்த இடம் மகனுக்கு ரொம்பவே பிடித்ததால் அவருக்காக அமெரிக்காவிலேயே குடும்பத்துடன் குடி புகுந்தார்.

மகனுக்காக நெப்போலியன் செய்த விஷயம்

இந்த சூழ்நிலையில் அங்கு இருந்து கொண்டே அவ்வப்போது சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அத்துடன் அமெரிக்காவிலேயே சொந்தமாக ஐடி கம்பெனி ஆரம்பித்து திறமையாக அதை நடத்தி வருகிறார். அத்துடன் அமெரிக்காவில் பங்களா போன்று ஒரு வீட்டையும் வாங்கி குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

தற்போது இவருடைய மகன் தனுஷ் என்பவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அது குறித்து தனுஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் அந்த நிச்சயதார்த்தம் பெண் வீட்டார்கள் மற்றும் நெப்போலியன் குடும்பத்தினர்கள் ஒன்றாக சந்திக்காத படி வீடியோ கால் மூலம் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.

nepolien son engaged
nepolien son engaged

இந்த ஒரு விஷயம் தான் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக நிச்சயதார்த்தம் என்றால் பெண் வீட்டார்கள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடத்தும் ஒரு மகிழ்ச்சியான தருணம். ஆனால் தனுஷ் உடல்நிலை அதற்கு ஒத்துக்கொள்ளாததால் அவரை கூட்டிட்டு இங்கே வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதால் தான் நெப்போலியன் தன்னுடைய மகனின் நிச்சயதார்த்தத்தை வீடியோ கால் மூலம் நடத்தி முடித்து விட்டார்.

nepolien son engaged (1)
nepolien son engaged (1)

பெண் குடும்பத்தினர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலக்கரைப்பட்டி ஊரில் வசித்து வருகிறார். அந்த வகையில் நெப்போலினுக்கு சம்மந்தியாக போகும் விவேகானந்தர் என்பவரின் ம களைதான் நெப்போலியன் அவருடைய மகன் தனுஷ்க்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார். தற்போது இது குறித்து வெளியான வீடியோ மூலம் தனுஷ்க்கு, நெப்போலியன் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Trending News