தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என்று அசத்தி வந்த நெப்போலியன் சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்தார். இப்போது தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் அவர் அவ்வப்போது சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்து திறமையாக நடத்தி வருகிறார்.
அமெரிக்கா வீடு

இந்நிலையில் இவருடைய அமெரிக்கா வீடு எப்படி இருக்கும் என்ற ஒரு வீடியோ சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. மிகவும் பிரம்மாண்டமான பங்களாவில் வாழ்ந்து வரும் நெப்போலியன் தன் வீட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என்பதை அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இவருடைய மூத்த மகனுக்கு உடல்நல பிரச்சினை இருப்பதால் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக வந்த நெப்போலியன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
பாத்ரூம்

Also read: நடிப்பு அவசியம் இல்ல, பிசினஸில் கல்லா கட்டும் 5 நடிகர்கள்.. கெஞ்சி கூப்பிட்டும் வராத நெப்போலியன்
தற்போது அவர் தன் இரு மகன்களுக்காகவும் பார்த்து பார்த்து வடிவமைத்த அந்த வீடு பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த அளவிற்கு அவர் சொர்க்கத்தையே விலைக்கு வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டில் அனைத்து விதமான வசதிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் அவருடைய மகன் தனுசுக்காக அவர் வீடு முழுவதும் லிப்ட் வசதியை செய்திருக்கிறார்.
லிவிங் ஏரியா

அது மட்டுமல்லாமல் அவருக்கு வசதியாக இருக்கும் வகையில் வீடு முழுவதும் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் அவர் எங்கிருந்தாலும் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியும். அத்துடன் ஹோம் தியேட்டர், மினி பார், பேஸ்கட் பால் கோர்ட் என அந்த வீடு அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த ஆச்சரியம் மட்டுமல்லாமல் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தந்தால் அவர்களுக்கான தங்கும் அறைகள், விலை உயர்ந்த மதுபான வகைகள், ஜிம் போன்ற அனைத்து வசதிகளும் அந்த வீட்டில் இருக்கிறது.
நீச்சல் குளம்

Also read: உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்தவர்.. பழசை மறக்காமல் இன்று வரை நெப்போலியன் செய்யும் வேலை
அதிலும் அந்த வீட்டின் உள் அலங்காரங்கள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. பழங்கால சிலைகளை கூட அவர் இந்தியாவிலிருந்து கப்பல் மூலமாக வரவழைத்திருக்கிறார். இதற்காக அவர் முறையான அரசாங்க அனுமதியையும் பெற்றிருக்கிறார். அந்த வகையில் இவருடைய வீட்டிற்குள் சென்று விட்டால் திரும்பி எப்படி வெளியே வருவது என்ற வழி கூட மற்றவர்களுக்கு மறந்து போய்விடும்.
ஹோம் தியேட்டர்

அந்த அளவுக்கு அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும் அரண்மனை போன்று காட்சியளிக்கிறது. இதற்காகவே நெப்போலியன் வீட்டின் ஒவ்வொரு இடங்களை பற்றியும் தனித்தனி பைல்களை போட்டு வைத்திருக்கிறார். அந்த வகையில் அவருடைய அமெரிக்கா வீடு ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது.
பேஸ்கட் பால் கோர்ட்

Also read: கார்த்தியை புகழ்ந்து தள்ளிய நெப்போலியன்.. அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுது