ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

சினிமா TO பிசினஸ்மேன்.. நெப்போலியனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் உயர்ந்த நடிகராக வலம் வந்த நெப்போலியன் இன்று வெற்றிகரமான தொழிலதிபராக அனைவரும் வியக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் மகன் திருமணத்தையும் கிராண்டாக நடத்திய அவர் சொத்து மதிப்பு எத்தனை கோடி என்ற விவரத்தை இதில் பார்க்கலாம்.

பாரதிராஜாவால் புது நெல்லு புது நாத்து படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் நெப்போலியன். இப்படத்தை அடுத்து உடனே உச்சம் தொடவில்லை அவர். எஜமான் படத்தில் வில்லனாகவும் ரஜினியைவிட மூத்தவராகவும் நடித்தார். அதன்பின், எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி, போன்ற படங்களில் கிராமத்து வேடம் ராஜ்கிரணுக்குப் பிறகு அவருக்குக் கச்சிதமாகக் பொருந்தியது.

அதனால் மக்களும் நெப்போலியனை நடிகராக ஏற்றுக் கொண்டனர். ஆனால் தொடர்ந்து அவரால் ஹிட் கொடுக்க முடியவில்லை. எனவே கமலின் விருமாண்டி, தசாவதராம், விஜயின் போக்கிரி உள்ளிட்ட படங்களில் நெப்போலியன் துணைக்காதாபாத்திரங்களில் நடித்தார்.

இதற்கிடையே 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வில்லிவாக்கம் தொகுதியில் வெற்று பெற்று எம்.எ.ஏ ஆனார். சினிமாவில் இருந்து இவரை அரசியலுக்கு அழைத்து வந்தவர் கலைஞர். அதன்பின், 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியானர். அப்போதைய காங்கிரஸ் அரசால் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014ல் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அக்கட்சியின் துணைத்தலைவராகவும் பதவி வகித்தார்.

அமெரிக்காவில் தொழிலதிபர்- இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு

அதன்பின், சினிமாவில் இருந்தும் அரசியலில் இருந்து விலகிய நெப்போலியன் அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் செட்டில் ஆனார். அதாவது நெப்போலியன் – சுதா தம்பதியரின் மூத்த மகன் தனுஷுக்கு குழந்தையில் இருந்தே தசை சிதைவு நோய் இருக்கும் நிலையில், 10 வயதில் இருந்தே அவரால் நடக்க முடியாது. இதற்கு மருத்துவம் பார்க்க, அமெரிக்கா சென்ற அவர் தன் மனைவி, இரண்டு மகன்களுடன் அங்கேயே தங்கிவிட்டார்.

அமெரிக்காவுக்குச் சென்று சினிமாவையும் அரசியலையும் கைவிட்டு விட்டோமே என எண்ணாமல் ஐடி கம்பெனி ஆரம்பித்து, அதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தார். இதில் முக்கிமான சினிமாவில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் அவர் அதிக வேலைவாய்ப்பும், கை நிறையச் சம்பளமும் வழங்கி வருகிறாராம்.

இதிலும் வெற்றி பெற்று தொழிலதிபராக ஜொலிக்கும் நெப்போலியன், விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி, 3000 ஏக்கரில் நிலம் வாங்கி, அதில் பல நூறு பேருக்கு வேலை கொடுத்து, தன் அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்கு அதில் விளையும் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறாராம்.

1000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு

இந்த நிலையில், பல கோடியில் வீடு, வாசல், சொகுசு கார் எனத சகல வசதிகளுடம் வாழ்ந்து வரும் நெப்போலியன் சமீபத்தில் தன் மகன் தனுஷ்- அக்‌ஷயா திருமணத்தை பிரமாண்டமாக ஜப்பானில் நடத்தி முடித்தார். இத்திருமணத்திற்கு மட்டும் ரூ.150 கோடியை அவர் செலவு செய்திருப்பதாகவும் அவரது சொத்த மதிப்பு ரூ.1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News