துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் வெளிவந்த துருவங்கள் பதினாறு திரைப்படம் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்தப் படமாக இருந்தது நரகாசுரன். அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஆத்மிகா, ஸ்ரேயா போன்ற பலர் நடித்திருந்தனர். இயக்குனர் கௌதம் மேனன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
கடந்த 4 வருட காலமாக பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கித் தவித்த இந்த திரைப்படத்தை பார்த்து டென்ஷனாகும் கார்த்திக் நரேன், அடிக்கடி சமூக வலைதளங்களில் கௌதம் மேனனுடன் சண்டை போட்டது ஞாபகம் இருக்கலாம்.
மிகவும் எதிர்பார்த்த அந்த திரைப்படம் இப்படி ரிலீஸாக முடியாமல் சொதப்பியதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விட்டது. இருந்தாலும் தற்போது மீண்டும் நரகாசுரன் படம் ரிலீஸ் ஆவதற்கான வாய்ப்புகள் ஆங்காங்கே தெரிகிறது.
அந்த வகையில் சோனி லிவ் என்ற ஒட்டி தளத்தில் விரைவில் நரகாசுரன் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வட இந்தியாவில் பிரபலமான சோனி லிவ் நிறுவனம் தற்போது தென்னிந்தியா பக்கம் தன்னுடைய பார்வையைத் திருப்பியுள்ளது.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களை மட்டுமே வாங்கி வெளியிட போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது அனைவரது பார்வையும் நரகாசுரன் படத்தின் மீதுள்ளது. இதனால் கார்த்திக் நரேன் தற்போது மகிழ்ச்சியில் உள்ளாராம்.
![naragasooran-cinemapettai-01](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/naragasooran-cinemapettai-01.jpg)