வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்தியன் நேவியை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்த நாசர்.. ஹோட்டலில் 400 ரூபாய்க்கு வேலை பார்த்து நடிகன் ஆனா சம்பவம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாசர் இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும்  நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பாகுபலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார்.

நாசர் ஆரம்பகாலத்தில் நடிகர்களாக சில படங்கள் நடித்திருந்தாலும் அடுத்தடுத்து பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெற்றி கண்டார். அதன்பிறகு அனைத்து படங்களும் இவருக்கென ஒரு தனி கதாபாத்திரத்தை பல இயக்குனர்கள் வைத்திருந்தனர்.

நாசர் சமீபத்தில் பேட்டியில் அவர் எப்படி நடிகராக மாறினார். அதற்கு யார் துணையாக இருந்தார்கள் என்பதை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். ஆரம்பகாலத்தில் நாசருக்கு சினிமா மீது நடிப்பதற்கான ஆர்வம் சுத்தமாக கிடையாது.

ஏனென்றால் சினிமாவில் நிரந்தரமான வருமானம் கிடையாது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தான் வருமானம் பெற வேண்டும். ஆனால் நிரந்தரமான ஒரு இடத்தில் வேலை பார்த்தால் மாத வருமானம் வந்துவிடும் குடும்பத்தை காப்பாற்றி கொள்ளலாம் என்பதற்காகத்தான் மாத வருமானம் கிடைக்கும் வேலையில் மீதான ஆர்வம் இருந்ததாக கூறினார். அதனால் இந்தியன் நேவியில் வேலையில் பார்த்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த வேலையை உதறித் தள்ளி விட்டு வந்துள்ளார்.

பல வேலைகளை செய்து வந்த நாசர் சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் வேலை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு 400 ரூபாய் வருமானம் வந்துள்ளது. அன்றைய காலத்தில் அந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொண்டு உள்ளார்.

அப்போது கூட அந்த ஹோட்டலில் ரஜினி, பாரதிராஜா உட்பட பல நட்சத்திரங்கள் வந்தாலும் அவர்களிடம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கேட்டதில்லை எனவும் அதற்கு காரணம் அப்போது அவருக்கு சினிமாவில் சற்றும் விருப்பம் இல்லாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

nassar
nassar

அவரது தந்தை நீ ஒரு நடிகராக வரவேண்டும் என கூறி அவரை திரைப்பட கல்லூரி சேர்த்துள்ளார். பின்பு ஒரு கட்டத்தில் தந்தை கண்டிப்பாக நடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியது மட்டுமில்லாமல் நீ நடித்தால் சினிமாவில் வெற்றி பெறுவாய் என கூறியதையடுத்து சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளைத் தேடி அதன் மூலம் தான் சினிமாவில் வெற்றி கண்டதாக கூறியுள்ளார்.

ஆனால் இவரது தம்பி ஒரு பேட்டியில் தனது அப்பா பல சொத்துக்களை வைத்திருந்ததாகவும். அந்த சொத்துக்களை வைத்து நாசர் சினிமாவில் வெற்றி பெறுவதற்கு உதவுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் தற்போது உச்சத்தில் இருக்கும் நாசர் தன்னையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வதில்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக சமீபத்தில் பேட்டியில் மேற்கண்டவாறு தனது பதிலடியை கொடுத்துள்ளார்.

Trending News