செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

30 ஆண்டு கால சினிமா வாழ்க்கை முடிகிறதா.. கொந்தளித்த நாசர்

சினிமாவில் நாசரின் பங்கு மிகப்பெரியது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக குணச்சித்திரம், வில்லன் என தனக்கு கொடுக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் கனகச்சிதமாக நடிக்கக் கூடியவர். தமிழ் மொழியைத் தாண்டி எல்லா மொழி படங்களிலும் பிரபலமானவர் நாசர்.

மேலும் பான் இந்திய மொழி படங்கள் என்றால் முதலில் நாசரை தான் படக்குழு தேர்வு செய்கிறது. ஏனென்றால் எல்லா மொழியிலும் பரிட்சயமான ஒரு நடிகர் பான் இந்திய மொழி திரைப்படத்தில் தேவைப்படுகிறார்கள். மேலும் பாகுபலி படத்தில் நாசர் பிங்கள தேவன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக ஹாஸ்டல் என்ற படம் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் தகவல் வெளியானது.

ஆனால் நாசர் அதற்கு மறுப்பு தெரிவித்த விளக்கமளித்துள்ளார். அதாவது நான் நடிகன் ஆக வேண்டும் தீர்மானிக்கப்பட்ட பிறகு முறையான பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகுதான் சினிமாவிற்கே வந்தேன். ஆனால் கடந்த இரண்டு தினங்களாக சினிமாவில் இருந்த தான் விலகப் போவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.

அது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. நான் எல்லோரிடமும் எளிமையாக பழக கூடியவன். இதனால் என்னை தொடர்பு கொண்ட இந்த விஷயத்தை கேட்டு இருக்கலாம். மேலும் ஒருவரின் சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் எந்த செய்தியையும் வெளியிடக்கூடாது.

எதுவும் தெரியாமல் தயவுசெய்து இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன் என நாசர் தெரிவித்துள்ளார். இதனால் நாசர் பற்றி வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என தெரியவந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News