நாசர் தமிழ்சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்றுக் கொள்ளாத கதாபாத்திரமே இல்லை என்று கூட கூறலாம், ஏனென்றால் அந்த அளவிற்கு முதலமைச்சர் கதாபாத்திரத்தில்லிருந்து வக்கீல் கதாபாத்திரம் வரைக்கும் அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் குணச்சித்திர வேடத்தில் நடித்து பல படங்கள் ஹிட் அடித்து உள்ளன.
ஜீன்ஸ்: பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், லக்ஷ்மி, ராதிகா மற்றும் நாசர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக இருந்தாலும் சிறு வயதில் அண்ணன் தம்பி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நாசரின் நடிப்பு தான் அனைவரையும் ஈர்த்தது.
ஏனென்றால் அண்ணன் தம்பியாக நடித்திருந்த நாசருக்கு அண்ணனுக்கு மனைவியாக கீதாவும், தம்பிக்கு மனைவியாக ராதிகாவும் நடித்திருந்தனர். இதில் தம்பி மனைவியாக நடித்திருக்கும் ராதிகா செய்யும் சேட்டையால் நாசர் தன் மகனுக்கு திருமணம் செய்தால் அது இரட்டையாக பிறந்த பெண் குழந்தைகளுக்குத்தான் என் மகனை திருமணம் செய்து தருவேன் என கங்கணம் கட்டி திரிவார். நாசரின் நடிப்பு தான் இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேவர் மகன்: கமல்ஹாசன், ரேவதி, கௌதமி மற்றும் நாசர் நடிப்பில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் கமல்ஹாசன் எந்த அளவுக்கு வரவேற்பும் பாராட்டும் கிடைத்ததோ அதே அளவிற்கு மாய தேவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நாசருக்கும் பாராட்டும் வரவேற்பும் கிடைத்தது. நாசரின் வாழ்க்கைக்கு ஒளி விளக்கு ஏற்றிய படம் என்றால் அது தேவர்மகன் திரைப்படம் தான். இன்றும் இப்படத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அவ்வை சண்முகி: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் அவ்வை சண்முகி. இப்படத்தில் மீனா, ஜெமினி கணேசன், மணிவண்ணன் மற்றும் நாசர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் மாதிரியே நாசர் கதாபாத்திரமும் அற்புதமாக செதுக்கி வைத்திருந்தார் கேஎஸ் ரவிக்குமார்.
அதிலும் குறிப்பாக கமல்ஹாசனை பார்த்து நாசர் கூறும் வசனமான அய்யருக்கும் தான கல்யாணம் ஆயிருச்சு, கல்யாணம் ஆகாதவங்க ஆகாதவங்கள கல்யாணம் பண்ணிக்கிறாங்க, கல்யாணம் ஆனவங்க கல்யாணம் ஆணவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன தப்பு என கேட்கும் வசனம் எல்லாம் நாசரின் நடிப்பு அற்புதமாக இருக்கும்.
பாகுபலி: இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது பாகுபலி திரைப்படம் தான். இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ் மற்றும் நாசர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆனால் படத்திலேயே முக்கிய கதாபாத்திரம் என்றால் அது சத்யராஜ் மற்றும் நாசர் தான்.
கட்டப்பாவாக நடித்த சத்யராஜுக்கு படத்தில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதே அளவிற்கு பிங்களதேவன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நாசர்ருக்கும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நாசரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது பாகுபலி தான்.
எம் மகன்: பரத், கோபிகா, வடிவேல், சரண்யா மற்றும் நாசர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்ற திரைப்படம் எம் மகன். இப்படத்தில் முழுக்க முழுக்க நாசர் கோபம் கலந்த தந்தையாக நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக நாசருடன் வடிவேலு செய்யும் சேட்டைகள் அனைத்தும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தன. இவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக எம்மகன் உள்ளது.
குருதிப் புனல்: பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன் ,கீதா, கௌதம், அர்ஜுன் மற்றும் நாசர் நடிப்பில் வெளியான திரைப்படம் குருதிப்புனல். இப்படத்தில் நாசரின் நடிப்பிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. நாசரின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் குருதிப்புனல் கண்டிப்பாக உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.