வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

என் மகனின் வாழ்க்கையை புரட்டி போட்ட தளபதி விஜய்.. நாசரின் உருக்கமான பேட்டி!

தமிழில் பல்வேறு படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்தவர் நடிகர் நாசர். ஆக்ரோசமான கேரக்டரில் ஒரு படமும் ஆஸ்வாசமான கேரக்டரில் ஒரு படமும் என வருடத்திற்கு சில படங்களில் இப்போதும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இவரது மனைவி கமீலா நாசர் சமீபத்தில் டுவிட்டியிருந்தார். தன் குடும்பமே தளபதிக்கு நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளதாக கூறினார்.

நாசரின் மூத்த மகனுக்கு ஏற்பட்ட விபத்தில் அவர் பழைய நினைவுகளை இழந்து விட்டாராம். மேலும் அவர தளபதியின் ரசிகர் என்பதால் தளபதியின் படங்கள் பாடல்கள் மட்டும் நினைவில் இருந்ததாகவும்.

faisal vijay
faisal vijay

அவரை விஜய் நேரில் சந்தித்து பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதையும் குறிப்பிட்டார். அவர் இப்படியான உதவியை செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை என்றும்.

நாங்கள் குடும்பத்தோடு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தளபதியின் இழகிய மனது எல்லோருக்கும் தெரியும் மேலும் இப்படி ஒரு விஷயம் செய்த தளபதியை நினைத்து மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.

Trending News