வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சாகும்வரை விஜய்யை மறக்க முடியாது.. காரணம் சொல்லி கண்கலங்கிய நாசர்

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் முத்திரை பதித்த நாசர் சமீபகாலமாக காமெடியிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார். தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் உள்ள பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

உலகமே வியந்துபார்த்த பாகுபலி படத்தில் நாசரின் வித்தியாசமான கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது மறுக்க முடியாத ஒன்று. நாசர் பல நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தளபதி விஜய்யை மட்டும் தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்று சொல்வதற்கு காரணம் என்ன.

நாசருக்கு மொத்தம் மூன்று மகன்கள். அதில் மூத்த மகன் நூரூல் ஹசன் பாஸில் என்பவருக்கு விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அதன்பிறகு அவரது சுயநினைவை இழந்துவிட்டார்.

தன்னுடைய பழைய ஞாபகங்களை மொத்தமாக இழந்தாரம் நூரூல் ஹசன் பாசில். பாஸில் தீவிர விஜய் ரசிகராம். இவ்வளவு பெரிய விபத்து நடந்தபிறகு அவரது ஞாபகத்தில் இருப்பது விஜய்யின் பெயர் மட்டும் தானாம். முதலில் அவர் விஜய், விஜய் என்று சொன்னபோது அவருடைய நண்பர் ஒருவரை தான் கூறுகிறார் என நினைத்தாராம் நாசர்.

ஆனால் தளபதி விஜய்யின் மீதுள்ள அளவில்லாத பற்றால் அவரது ஞாபகத்தில் விஜய் இருப்பதை அறிந்து கொண்ட நாசர் அதை விஜய்க்கு தெரியப்படுத்தியுள்ளார். அதைக் கேட்டு மனம் நெகிழ்ந்த விஜய் நூரூல் ஹசன் பாஸிலின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நேரில் சென்று கேக் வெட்டி மகிழ்வாராம். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி அவருக்கு போன் செய்யவும் மறக்கமாட்டாராம்.

இதனால் சினிமாவையும் தாண்டி விஜய்யை எங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார் நாசர். அவரது மனைவியும் விஜய்க்கு நன்றிக்கடன் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தளபதி விஜய்க்கு இதுபோன்று நெஞ்சம் நெகிழ வைக்கும் ரசிகர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Noorul Hassan Faizal-vijay-cinemapettai
Noorul Hassan Faizal-vijay-cinemapettai

Trending News