தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல வருடங்களாக நடித்து வருபவர் நாசர். அதுமட்டுமில்லாமல் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து கொண்டு அதை அப்படியே வெளிக் கொண்டு வரும் சொற்ப நடிகர்களில் மிக முக்கியமானவர்.
நாசர் ஆரம்ப காலகட்டங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பின்னர் முரட்டு வில்லனாக தோன்றினார். அதன்பிறகு ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்சமயம் முன்னணி நடிகர்களுக்கு தந்தை, நடிகைகளுக்கு தாத்தா போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் முன்னுக்கு வந்த நடிகர்களில் நாசருக்கு மிக முக்கிய இடமுண்டு. அப்பேர்ப்பட்ட நாசர் ஒரே ஒரு படத்தை தயாரித்து இயக்கி நடுத்தெருவுக்கு வந்து தன்னுடைய துணிமணிகள் எல்லாம் விற்கும் நிலைமைக்கு ஆளான கதை தெரியுமா.
நாசர் எழுதி இயக்கிய திரைப்படம் பாப்கார்ன். ரொமான்டிக் காதல் கதையை மையமாக வைத்து இயக்கியிருந்த இந்தப் படத்தில் ஹீரோவாக மோகன்லாலும், முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன் மற்றும் ஊர்வசி நடித்தனர்.
அதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு தோல்வி படத்தை யாருமே பார்த்ததில்லையாம். அந்த அளவுக்கு மரண தோல்வி பெற்ற அந்த படத்தின் மூலம் நடுத்தெருவுக்கு வந்தாராம் நாசர். போதாக்குறைக்கு கடன் தொல்லை அதிகமானதாம். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் நாசருக்கு நடிகர் சங்கத்தில் ரெட் கார்டு போட்டு விட்டார்களாம்.
கடனை எல்லாம் முடிந்த பிறகு தான் நாசர் நடிக்க வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டாராம். ஆனால் அவரது மனைவியே கமீலா நாசர், நீங்கள் கடனை அடைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக தொடர்ந்து சினிமாவில் நடித்தே ஆகவேண்டும் என்று சொல்லியதால் வேறுவழியின்றி குணச்சித்திர கதாபாத்திரங்கள் வில்லன் வேடங்கள் என அனைத்திலும் நடித்து கடனை கட்டியதாக குறிப்பிட்டுள்ளார் நாசர்.