வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

16 வயதில் தேசிய விருது 22 வயதில் எதிர்பாராத மரணம்.. புகழின் உச்சத்தை தொட்ட கார்த்திக் நடிகை

Actor Karthik: சிபாரிசு நடிகராய் தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெற்று அதன் பின் தன் அழகான தோற்றத்தாலும், எதார்த்தமான துள்ளல் நடிப்பாலும் முன்னணி கதாநாயகனாய் வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இந்நிலையில் இவருடன் ஜோடி போட்டு, புகழின் உச்சம் தொட்ட நடிகைக்கு ஏற்பட்ட எதிர்பாராத மரணம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் எண்ணற்ற படங்களில் மாபெரும் வெற்றி கண்டவர் கார்த்திக். இந்நிலையில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை நினைத்தேன் பாட்டு படிச்சேன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாய் நடித்தவர் தான் மோனிஷா உன்னி.

Also Read: மணிரத்னத்தை விட அதிகம் சம்பாதிக்கும் சுஹாசினி.. இந்த மொக்க பேட்டிக்கு இத்தனை லட்சமா.?

14 வயதில் மலையாள மொழி படங்களில் நடிகையாய் அறிமுகமானவர் மோனிஷா உன்னி. முதல் படமே அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து தமிழில் பூக்கள் விடும் தூது என்னும் படத்தில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதன்பின் சத்யராஜ் உடன் திராவிடன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருப்பார். அவ்வாறு அடுத்தடுத்த படங்களில் முன்னணி கதாநாயகியாய் வலம் வந்த இவர் மணிவண்ணன் இயக்கத்தில் மூன்றாவது கண் என்னும் திகில் படத்தில் நடித்தார். இதுவே இவருக்கு கடைசி படமாய் அமைந்தது.

Also Read: மோசமான பிரச்சனையில் பாரதிராஜா.. தேனியில் ஏற்பாடு செய்யப்பட்ட மீட்டிங், மொத்தமாய் மறந்து போச்சு

அவ்வாறு மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தன் தாயுடன் சென்ற மோனிஷா உன்னிக்கு கார் விபத்து ஏற்பட்டது. அதில் அவரின் தாயார் படுங்காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் மோனிஷா சம்பவம் இடத்திலேயே  உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவ்வாறு 14 வயதில் நடிகை, 16 வயதில் தேசிய விருது பெற்ற இவர் 22 வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்டது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நல்ல திறமை உள்ள நடிகையை இந்த திரை உலகம் இழந்தது என்றே கூறலாம்.

Also Read: டிஆர்பி மங்கியதால் விஜய் டிவியை விலை பேசிய 3 பிரம்மாண்ட நிறுவனங்கள்.. அதிக தொகை யார் தெரியுமா?

Trending News