சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஜெய் பீம்-க்கு டஃப் கொடுக்க போகும் உண்மை சம்பவம்.. சூர்யாவுக்காக செதுக்கும் தேசிய விருது இயக்குனர்

Actor Suriya: ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் பல விருதுகளையும் தட்டிச் சென்றது.

தற்போது இந்த படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் மற்றொரு உண்மை சம்பவம் தயாராக இருக்கிறது. இதன் மூலம் அடுத்த தேசிய விருதை கைப்பற்றுவதற்கும் சூரரைப்போற்று கூட்டணி முயற்சி செய்து வருகிறது. அதாவது சூர்யா நடிப்பில் பயோபிக் படமாக உருவாகி இருந்த இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார்.

Also read: சரவெடியாக வரவுள்ள சூர்யாவின் 43-வது பட அறிவிப்பு.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி

பல தேசிய விருதுகளை வாங்கி குவித்த இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி எப்பொழுது இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் சுதா கொங்கரா சூர்யாவுக்காக தரமான ஒரு உண்மை சம்பவத்தை செதுக்கி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் பயோபிக் படம் தான் உருவாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அதை மறுத்திருக்கும் இயக்குனர் மனதை பிசையும் வகையில் ஒரு கதை இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த கதை தன் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ரசிகர்களுக்கும் அது பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Also read: மேடையிலேயே கண்கலங்கிய சிவகுமார்.. நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தலை குனிந்த கார்த்தி, சூர்யா

இதுதான் தற்போது சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கங்குவா திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை அடுத்து சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படமும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது.

இந்நிலையில் சுதா கொங்கராவும் தன் பங்குக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஜெய் பீம் படத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் உருவாக இருக்கும் இப்படத்திற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கும் இயக்குனர் சூர்யாவுக்காக கதையை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம்.

Also read: ஆதி புருஷால் வந்த சுதாரிப்பு.. சிறுத்தை சிவாவுக்கு வார்னிங் கொடுத்த சூர்யா

Trending News