திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சஞ்சய்க்காக காத்திருக்கும் தேசிய விருது இயக்குனர்.. அப்பாவுக்கு போட்டியாக வர சம்மதிப்பாரா?

தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இடம் இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்க பல நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவரது வாரிசான சஞ்சய்க்கு அந்த இடம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதாவது சஞ்சயின் கால்ஷீட்டுக்காக தேசிய விருது இயக்குனர் காத்துக் கொண்டிருக்கிறார்.

விஜய்யின் மகன் நடிகர் என்பதை காட்டிலும் இயக்குனராக தான் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்று போராடி வருகிறார். இந்நிலையில் சஞ்சய் குறும்படம் இயக்குவதில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார். இதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறாராம்.

Also Read : பல கோடி பிசினஸ் இருக்கும் இடத்தில் நேர்மை இருக்காது.. அஜித், விஜய்யை குத்தி காமிச்ச ஹெச்.வினோத்

மேலும் சஞ்சய் விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு படம் இயக்குவார் என எதிர்பார்க்கலாம். ஆனால் சூரரைப் போற்று படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த சுதா கொங்கரா எழுத்தாளர் நரேனின் வேட்டை நாய்கள் என்ற நாவலில் இருந்து இரண்டு கதைகளை வாங்கி வைத்துள்ளார்.

அதில் ஒரு கதையில் விஜய்யின் மகன் சஞ்சய் மட்டுமே பொருந்துவார் என தன் மனதில் சுதா கொங்கரா நினைத்துள்ளார். இது குறித்து விஜய் இடம் அவர் பேசும் போது சஞ்சய் இயக்குனர் ஆவதில் மட்டுமே இப்போது ஆர்வமாக இருக்கிறார். அதற்கான முயற்சியில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

Also Read : கோலிவுட்டில் விஜய்க்கு 3வது இடம் தான்.. பெரும் பரபரப்பை கிளப்பிய பிரபலம்

சஞ்சயிடம் இந்த கதை குறித்து நீங்கள் கேட்டுப் பாருங்கள் அவர் சம்மதித்தால் படம் பண்ணுங்கள் என்று விஜய் கூறியுள்ளார். அதற்கு சுதா கொங்கரா கண்டிப்பாக சஞ்சயிடம் பேசுகிறேன் என்றும், அவருக்காக காத்திருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

ஆகையால் சஞ்சய் இந்த படத்தில் நடித்தால் தனது தந்தைக்கு போட்டியாக வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவர் தனது தந்தை போல நடிகராவதை காட்டிலும், தனது தாத்தாவைப் போல இயக்குனராக வேண்டும் என்பதில் தான் அவருடைய முழு கவனமும் உள்ளது. எனவே இப்போதைக்கு சுதா கொங்கரா, சஞ்சய் கூட்டணி படம் உருவாகுவது கடினம் தான்.

Also Read : தூக்கிவிட்ட இயக்குனரை கழட்டிவிட்ட அஜித்.. விஜய் அப்பாவும் விரட்டி விட்ட பரிதாபம்

Trending News