புதன்கிழமை, ஜனவரி 1, 2025

தேசியவிருது நடிகையுடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி.. புஷ்பா 2 படத்தில் செய்யப்போகும் சம்பவம்

விஜய் சேதுபதியின் மார்க்கெட் தற்போது தமிழ் சினிமாவில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்கள் வசூல் வேட்டையாடி வருகிறது. இதனால் பிரபல இயக்குனர்கள் எல்லோரும் விஜய் சேதுபதியை தங்களது படங்களில் வில்லனாக நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.

இந்நிலையில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் விஜய் சேதுபதியால் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகயுள்ளது.

இப்படத்தில் பகத் பாசிலுக்கு உயர் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை நடிக்கவுள்ளார். ஏற்கனவே விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக 3 நடிகைகள் நடித்திருந்தனர்.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்கவுள்ளார். கிராமத்து கதாபாத்திரங்கள் என்றால் பின்னி பெடல் எடுக்க கூடியவர் பிரியாமணி. அதிலும் பருத்திவீரன் படத்தில் இவரது முத்தழகு கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.

அதுமட்டுமின்றி பருத்திவீரன் படத்திற்காக பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ப்ரியாமணியும் நடித்துவருகிறார்.

தற்போது பான் இந்தியத் திரைப்படமாக உருவாக உள்ள புஷ்பா 2 படத்திலும் பிரியாமணி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் விஜய்சேதுபதிக்கு இப்படத்தில் மிகப்பெரிய ஸ்கோப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் புஷ்பா 2 படத்திற்கான அடுத்த அப்டேட் வெளியாகும்.

Trending News