Sivakarthikeyan: அயலான் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் வெளிவர இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனனின் பயோபிக்காக உருவாகி இருக்கும் இப்படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.
கமல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 23வது படத்தில் நடித்து வருகிறார்.
இதில் அவருக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார். இதை அடுத்து சிவகார்த்திகேயன் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி இருந்தது. அதன்படி தற்போது அவருடைய 24-வது படத்தை இயக்கப் போவது யார் என தெரியவந்துள்ளது.
மீண்டும் இணையும் டான் கூட்டணி
அந்த வகையில் டான் படத்தின் மூலம் கவனம் பெற்ற சிபி சக்ரவர்த்தி தான் சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர். இதில் ஹீரோயின் ஆக ராஷ்மிகாவும் வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் இணைந்துள்ளனர்.
தற்போது தனுசுடன் குபேரா படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.
ஏற்கனவே நெட்டிசன்கள் இவரை கிரிஞ்ச் நடிகை, எக்ஸ்பிரஷன் குயின் என கிண்டல் அடிப்பதுண்டு அதேபோல் டான் பட இயக்குனரையும் கிரிஞ்ச் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
ஏனென்றால் ரஜினி படத்தை இயக்கும் அளவுக்கு இவருக்கு வாய்ப்பு வந்தும் அதை இவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனாலயே டான் படம் வெளிவந்து இதனை வருடங்கள் ஆகியும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதுவும் சிவகார்த்திகேயன் இவருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஆக மொத்தம் இந்த கூட்டணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்யுமா என பார்ப்போம்.
வெற்றி இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன்
- புதுவித பரிமாணத்தில் தோன்ற உள்ள சிவகார்த்திகேயன்!
- கேமியோ கதாபாத்திரத்திற்கு வரும் சிவகார்த்திகேயன்
- வெங்கட் பிரபுவை நம்ப வைத்து காலை வாரிய சிவகார்த்திகேயன்