பிறந்தநாள் கொண்டாடும் ராஷ்மிகா.. நேஷனல் க்ரஷ்ஷின் சொத்து மதிப்பு இவ்வளவா.!

rashmika-mandana
rashmika-mandana

Actress Rashmika Mandana: நேஷனல் கிரஷ் என்று கொண்டாடப்படும் ராஷ்மிகா இன்று தன்னுடைய 28வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தற்போது புஷ்பா 2 உட்பட தெலுங்கில் மூன்று படங்களும் ஹிந்தியில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

அதனாலேயே இப்போது ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள் தேடி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு விவரங்களை இங்கு காணலாம்.

தற்போது பிசியான நடிகையாக இருப்பதால் இவருடைய சம்பளமும் அதற்கு ஏற்ற வகையில் தான் இருக்கிறது. அதன்படி தற்போது இவர் ஒரு படத்திற்கு 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

கோடிகளுக்கு அதிபதியான ராஷ்மிகா

அது மட்டுமல்லாமல் விளம்பர படங்கள், சோசியல் மீடியா மூலமும் இவருக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பெங்களூரில் ஒரு சொகுசு வீடும் ஹைதராபாத், மும்பை என பல இடங்களில் சொத்துக்களும் இருக்கிறது.

அதைத்தொடர்ந்து ஆடி, இனோவா உள்ளிட்ட பலவகையான கார்களும் இருக்கின்றன. இதன் மதிப்பே சில கோடிகள் இருக்கும்.

அந்த வகையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு தற்போது 70 லிருந்து 80 கோடி ரூபாயாக இருக்கிறது. அடுத்த பிறந்த நாளுக்கு இது இன்னும் பெருகினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Advertisement Amazon Prime Banner