தமிழ் சினிமாவிற்கு கடந்த 1994ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நாட்டாமை. இந்த காலகட்டங்களில் வெளியான படங்களில் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய படமாகவும், அதிக வசூல் செய்த படமாகவும் இருந்தது. நாட்டாமை படத்தின் வெற்றியை பார்த்து அன்றைய முன்னணி நடிகர்களே மூக்கின்மேல் விரல் வைத்தன.
இப்படி தமிழில் பல சாதனைகள் படைத்த நாட்டாமை திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டும்தானாம். ஆனால் இந்த காலத்தில் எடுக்கப்படும் படத்திற்கான பிலிம் சிட்டி செலவே கோடிகளை தாண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டாமை படத்தின் மொத்த பட்ஜெட் 50 லட்சத்தில், இரட்டை வேடத்தில் நடித்த கதாநாயகனான சரத்குமாருக்கும், காமெடி கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணிக்கும், படத்தின் இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் ஆகியோருக்கும் தலா ரூபாய் 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம்.
மீதமிருக்கும் ரூபாய் 35 லட்சத்தில் படத்தில் நடித்த மற்ற பிரபலங்களான மீனா, குஷ்பூ, மனோரமா, விஜயகுமார், சங்கவி, பொன்னம்பலம், செந்தில் உள்ளிட்டோருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது. அத்துடன் படத்திற்கான முழு செலவுமே 50 லட்சத்தில் முடிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் மிகக் குறைந்த செலவில் நாட்டாமை படத்தை திட்டமிட்டு எடுத்ததன் மூலம் அதிக லாபம் ஈட்டிய படமாக இன்று வரை திகழ்கிறது. ஆனால் இந்த காலத்தில் எடுக்கப்படும் படத்தின் கதாநாயகன் கதாநாயகிகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட வேண்டியதாக உள்ளது.
அதனால் பட்ஜெட்டும் பல கோடிகளை தாண்டுகிறது. தற்போது நாட்டாமை படத்தைப் பற்றிய இத்தகைய தகவல்கள் ஆனது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.