வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வான்டடா வண்டியில் ஏறிய நட்டி.. சிறுத்தை சிவாக்கு முட்டுக்கொடுத்து புண்னான எட்டப்பன் கொடுவான் 

சிறுத்தை சிவா ஒளிப்பதிவாளராக 2001 ஆம் ஆண்டு தன்னுடைய கேரியரை சினிமாவில் தொடங்கினார். இவர் இயக்குனர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். 2011ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான சிறுத்தை படம் அனைவரின் கவனத்தையும் நீர்த்தது.

 அதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து வீரம் படம் இயக்கினார். இந்த படமும் அவருக்கு ஹிட் அடித்து இவரை அடுத்த லெவலில் கொண்டு போய் வைத்தது. அதன் பின் தொடர்ச்சியாக விவேகம், வேதாளம், விசுவாசம், போன்ற படங்களை அஜித்தை வைத்து இயக்கினார். இதில் எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கை கொடுக்கவில்லை.

 இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் இயக்குவதற்கு இவருக்கு வாய்ப்பு வந்தது.  இந்த படத்திற்கு முன்னர் ரஜினி 2.0, தர்பார் என தோல்வி படங்கள் கொடுத்திருந்தார். இந்த பெரிய ப்ராஜெக்ட் சிவா கையில் வந்தது. ஆனால் இந்த படமும் ரஜினிக்கு கை கொடுக்கவில்லை.

கடைசியாக சிவா இயக்கிய படம் கங்குவா. கிட்டத்தட்ட 3 வருடம் கழித்து சூர்யாவிற்கு இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தயாரித்தவர் ஞானவேல் ராஜா. படம் 2000 கோடி வசூல் சாதனை செய்யும்.  சக்ஸஸ்  மீட்டிற்கு எல்லோரும் வந்து விடுங்கள் என ஓவர் கான்ஃபிடண்டாக பேசினார்.

 கங்குவா படம் ரிலீஸ் ஆன அன்றே நன்றாக இல்லை என எல்லா பக்கத்தில் இருந்தும் விமர்சனங்கள் வந்து படுதோல்வி அடைந்தது. ஆனால் இப்பொழுது வான்டடாக இந்த படத்தில் கொடுவான் கதாபாத்திரத்தில் நடித்த நட்டி முதல் பாகத்தை வைத்து பேசாதீர்கள், இரண்டாம் பாகம் வந்த பின் தெரியும் என பேசி வருகிறார்.

 இதனால் இந்த படம் இரண்டாவது பாகம் வருவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே முதல் பாகம் நன்றாக ஓடவில்லை என்றும்.400 கோடி பட்ஜெட்டில் எடுத்து ப்ளாப்பான இந்த படம், எதுக்கு இரண்டாம் பாகம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது. இப்பொழுது நடராஜ் சொல்லி இருப்பது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.  

Trending News