தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. ஆனால் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் போது அனுஷ்காவிற்கு தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வர அப்படியே தெலுங்கு தேசத்திற்கு குடியேறினார்.
ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவில் எங்கு திரும்பினாலும் அனுஷ்காவின் திரைப்படங்கள்தான் ஓடிக்கொண்டிருந்தன. அந்த அளவிற்கு தெலுங்கு தேசத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு பக்கம் கதாநாயகியாக நடித்தாலும் மற்றொரு பக்கம் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஆனால் பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்காவிற்கு பெரிய அளவில் தெலுங்கு சினிமாவிலும் படவாய்ப்புகள் வரவில்லை. அதனால் சமீபகாலமாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் மௌனம் காத்து வந்தார். தற்போது ஒரு சில இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அனுஷ்காவிடம் தங்கள் கதைகளை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்படி தெலுங்கு சினிமாவில் இயக்குனர் ஒருவர் தனது படத்தின் அனுஷ்காவின் கதாபாத்திரத்தை பற்றி கூறியுள்ளார். யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நவீன் போலி செட்டி என்பவருக்கு மனைவியாக அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது 39 வயதாகும் அனுஷ்கா 31 வயதாகும் நடிகருடன் ஜோடியாக நடிக்கலாம் ஆனால் மனைவியாக நடிக்கலாமா என கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் அனுஷ்கா இதைப்பற்றி எதுவும் வெளிப்படையாக கூறாமல் படத்தை படமாக பார்க்க வேண்டுமே தவிர வேறு எதனுடனும் ஒப்பிட கூடாது என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.