லோகேஷ் கனகராஜுக்கு ஆதரவாக களமிறங்கிய நவீன் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகண்ட படம் “மூடர் கூடம்”.
ஐந்து தனி கதைகள் ஐந்து தனி கேரக்டர்கள் என அனைத்திற்குமான முக்கியத்துவத்தை அட்டகாசமாக காட்டியிருப்பார் இயக்குனர் நவீன் அவரே நாயகனாகவும் அறிமுகமாகி கலக்கியிருப்பார்.
இப்படியான நிலையில் அடுத்தடுத்த படங்கள் குறித்து ஏதும் குறிப்பிடாத இயக்குனர் நவீன் கூறிப்பிட்ட சிலருக்காக சமூக வலைகளில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருந்து வருகிறார். இப்படியாக பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்று வெியிட்ட செய்திக்காக கொந்தளித்துள்ளார்.
தமிழல் வளரந்து வரும் இயக்குனர் அட்லி கதை திருட்டு கதை காப்பி என எத்தனையோ விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை எல்லாவமாய் திரைக்கதையை காட்டி தெறிக்க விடுவதில் வித்தகர் தான் இயக்குனர் அட்லி.
இயக்குனர் அட்லியோடு ஒப்பிட்டு கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை காட்டியிருந்தது ஒரு தனியார் ஊடகம். அவர்கள் குறிப்பிட்டதாவது “கதை திருட்டு என்கிற வகையில் அட்லியோடு இணைகிறார் லோகேஷ் கனகராஜ்” இவ்வாறு அந்த செய்தி இருந்தது.
கதையை பொறுத்த வகையில் கைதி படத்தின் கதையை ஒருவர் தயாரிப்பாளர் எஸ்ஆர் .பிரபுவிடம் கூறியதாகவும் அதற்காக முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் தந்ததாகவும் அந்த கதையை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி தயாரிப்பு நிறுவனம் பலகோடிகளை சம்பாதித்ததாகவும் கூறினார்.
இந்த வழக்கிற்காக இந்தியில் ரீமேக் உரிமமும் கைதி படத்தின் இரண்டாம் பாகமும் நிறுத்தி வைக்கபபட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கின் உண்மைத்துவம் அறியாமல் இப்படி ஒரு செய்தியை வெளியிட்ட ஊடகத்தின் மீது காட்டமாய் பாய்ந்துள்ளார் நடிகரும் இயக்குனருமான நவீன்.
நவீனின் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது ப்ளூடிக் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். உண்மை எதுவென அறிந்து பதிவிடுதலே செய்தி அறம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செய்திகள் வளரும் இயக்குனர்களுக்கான வாய்ப்பினை தட்டிப்பறிக்கும் முயற்சி என்றும் கூறியுள்ளார்.